சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலதிபரை கடத்திய வழக்கில் 'மாஜி' டிரைவர் உள்பட ஆறு பேர் கைது

Added : நவ 20, 2020
Share
Advertisement
நாமக்கல்: தொழிலதிபரை கடத்தி சென்ற வழக்கில், முன்னாள் டிரைவர் உள்பட, கூலிப்படையை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.நாமக்கல், கணேசபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 59. இவர், முருகன் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை, திருச்சி சாலையில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், 12:50 மணிக்கு அலுவலகம் அருகில் உள்ள டீக்கடையில், பொன்னுசாமி நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு

நாமக்கல்: தொழிலதிபரை கடத்தி சென்ற வழக்கில், முன்னாள் டிரைவர் உள்பட, கூலிப்படையை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.


நாமக்கல், கணேசபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 59. இவர், முருகன் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை, திருச்சி சாலையில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், 12:50 மணிக்கு அலுவலகம் அருகில் உள்ள டீக்கடையில், பொன்னுசாமி நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு 'டொயோடா குவாலிஸ்' காரில் வந்த ஒரு கும்பல், அவரை கடத்தி சென்றது. இவர் மனைவி நிர்மலா, 47, உடனடியாக அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இது குறித்து, நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் நிர்மலா புகாரளித்தார். அதில், ஈரோடு மாவட்டம், சிவகிரி அடுத்த எல்லப்பாளையத்தை சேர்ந்த, காமராஜ் என்பவர், என் கணவரிடம் முன்பு டிரைவராக பணியாற்றி வந்தார். அப்போது, அவர் என் கணவரிடம், 8.50 லட்சம் ரூபாய் அடமான கடன் பெற்றிருந்தார். இது தொடர்பாக, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, என் கணவரிடம், அடமான கடனை ரத்து செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கூலிப்படை மூலம், கடத்தி சென்று கொலை செய்து விடுவேன் என, காமராஜ் மிரட்டி உள்ளார். என் கணவரை, காமராஜ் கடத்தி சென்றிருப்பார் என, சந்தேகப்படுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, பொன்னுசாமியை மீட்பதற்காக, எஸ்.பி., சக்தி கணேசன் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இதற்கிடையில், திண்டுக்கல் போலீசார் வாகன சோதனை செய்தபோது, ஆறு பேர் கொண்ட கும்பல், பொன்னு சாமியை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், ஆறு பேரையும் நாமக்கல் அழைத்து வந்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், எல்லப்பாளையத்தை சேர்ந்த, காமராஜ், 57, என்பவர், அடமான கடனை ரத்து செய்யாததால், பொன்னுசாமியை கூலிப்படை மூலம், கடத்தி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கூலிப்படையை சேர்ந்த தட்டப்பாளையம் ஜீவா, 27, குளத்துப்பாளையம் சரவணன், 37, கவின்குமார், 26, கருக்கம்பாளையத்தை சேர்ந்த, 18 வயதான இருவர் என, மொத்தம் ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X