பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது: தளபதி எச்சரிக்கை

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: எல்லை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே எச்சரிக்கை விடுத்துள்ளார்.நேற்று (நவ.,19) அதிகாலையில் நக்ரோட்டா மாவட்டத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பான் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர்கள் இணைந்து கண்காணிப்புப் பணியில்
IndianArmy, ChiefGeneral, Naravane, Warns, Terrorist

புதுடில்லி: எல்லை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (நவ.,19) அதிகாலையில் நக்ரோட்டா மாவட்டத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பான் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர்கள் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் வந்த பயங்கரவாதிகளை போலீசார் விசாரிக்க முயன்றபோது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்த 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


latest tamil newsஇந்நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் ராணுவ தளபதி நராவனே கூறியதாவது:
பாதுகாப்புப் படையினர் திறம்பட பயங்கரவாதிகளை அழித்துள்ளனர். வீரர்களின் துணிச்சலுக்கும், வீரத்துக்கும் இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவுக்குள் ஊடுருவ நினைக்கும் பயங்கரவாதிகள், மீண்டும் உயிருடன் திரும்ப முடியாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-202023:44:03 IST Report Abuse
Ramesh R suicide bombers know that they will die in the attack..........
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
20-நவ-202021:53:02 IST Report Abuse
கொக்கி குமாரு இதுவே காங்கிரஸ் ஆட்சியா இருந்திருந்தா ஒரு ராணுவ தளபதிக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்து இப்படி பேட்டி கொடுக்க விட்டிருப்பார்களா? அதுதான் தேச பற்று மிக்க பாஜகவிற்கும் ஊழல்கள் நிறைந்த காங்கிரஸிற்கும் உள்ள வித்தியாசம்.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-நவ-202018:07:19 IST Report Abuse
Dr. Suriya வாழ்க நீங்கள்... மண்ணு கூட இப்படி சொன்னதில்லை வீரமா.....சும்மா இருக்க முடியாது ... பொறுத்து கொள்ள முடியாதுன்னு தான் சவுண்ட் விட்டார் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X