பொது செய்தி

தமிழ்நாடு

வாய்க்கால்களில் செடி, கொடி ஆக்கிரமிப்பு: வயல்களில் புகுந்த நீரால் மூழ்கிய பயிர்கள்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கரூர்: கிளை வாய்க்காலில் செடி, கொடி வளர்ந்த நிலையில், மழைநீர் வயல்களில் புகுந்ததால், நெற் பயிர்கள் தண்ணீர் மூழ்கின.கரூர் மாவட்டத்தில், அமராவதி கிளை வாய்க்கால் பாலம்மாள்புரம், சணப்பிரட்டி, புலியூர், கோயம்பள்ளி, கட்டளை, மணவாசி வழியாக சென்று, மாயனூர் காவிரி ஆற்றில் கலக்கிறது. தற்போது, கீழமாயனூர், கட்டளை சுற்று வட்டார பகுதிகளில், சம்பா நெல் சாகுபடி, 1,000 ஏக்கரில் நடந்து

கரூர்: கிளை வாய்க்காலில் செடி, கொடி வளர்ந்த நிலையில், மழைநீர் வயல்களில் புகுந்ததால், நெற் பயிர்கள் தண்ணீர் மூழ்கின.


கரூர் மாவட்டத்தில், அமராவதி கிளை வாய்க்கால் பாலம்மாள்புரம், சணப்பிரட்டி, புலியூர், கோயம்பள்ளி, கட்டளை, மணவாசி வழியாக சென்று, மாயனூர் காவிரி ஆற்றில் கலக்கிறது. தற்போது, கீழமாயனூர், கட்டளை சுற்று வட்டார பகுதிகளில், சம்பா நெல் சாகுபடி, 1,000 ஏக்கரில் நடந்து வருகிறது. அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்தால் கூட, இது கடைமடை வாய்க்கால் என்பதால், அதில் தண்ணீர் வரத்து கிடையாது. இந்த பகுதியில், நிலத்தடி நீரை மட்டும் நம்பி விவசாயம் நடந்து வருகிறது. மேலும், வாய்க்கால் பராமரிப்பு இல்லாமல், முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்து விட்டன. கடந்த இரண்டு நாள்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. வாய்க்காலில் மழைநீர் ஓட வழியில்லாததால், அருகில் உள்ள வயல்களில் தண்ணீர் மூழ்கி கிடக்கிறது.

இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: அமராவதி ஆற்றில், பாசனத்துக்கு குறைந்த நாட்களே தண்ணீர் திறக்கப்படும். அப்போது, செடி, கொடி மற்றும் முட்செடிகளால், தண்ணீர் வருவதில்லை. இருந்த போதும் கிணறு, போர்வெல் பாசனத்தை நம்பி பயிர் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது பெய்த மழையில், கடைமடை வாயக்காலில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பல ஆண்டுகளாக, வாய்க்கால் தூர் வாரப்படாததால், அருகில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்குள்ள, வாய்க்கால் ஷட்டரும் பழுதடைந்து விட்டதால், அதனை திறக்க முடியவில்லை. தற்போது, 500 ஏக்கர் அளவில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. மேலும், 15 ஏக்கரில் நடவு பணி நடந்த நிலையில், இப்போது மேற்கொள்ள முடியவில்லை. வயல்களில் நெல் நாற்றுகள் கிடக்கிறது. விரைவில் தண்ணீர் வடியவில்லை என்றால், நாற்று அழுகி விடும் அபாயம் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X