பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் மழை: மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து சரிவு

Added : நவ 20, 2020
Share
Advertisement
கரூர்: டெல்டா மாவட்டங்களில், தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், மாயனூர் கதவணை நீர் வரத்து சரிவு ஏற்பட்டது.டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன், 12 முதல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்டா பகுதிகளில், மழை அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால், நேற்று முதல்

கரூர்: டெல்டா மாவட்டங்களில், தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், மாயனூர் கதவணை நீர் வரத்து சரிவு ஏற்பட்டது.


டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன், 12 முதல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்டா பகுதிகளில், மழை அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால், நேற்று முதல் மாயனூர் கதவணையில், நீர் வரத்து குறைந்து விட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 12 ஆயிரத்து, 808 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 8,294 கன அடியாக குறைந்தது. சாகுபடிக்காக, காவிரியாற்றில், 7,274 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உட்பட, மூன்று பாசன வாய்க்கால்களில், 1,020 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 1,729 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர் மட்டம், 71.76 அடியாக இருந்தது. பாசனத்திற்காக, ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை ஆத்துப்பாளையம் அணை நிலவரம்: க.பரமத்தி அருகே, ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி நீர் வரத்து, 195 அடியாக உள்ளது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 19.02 அடியாக உள்ளது. இங்கிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X