பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 10 பள்ளி மாணவர்கள் சேர்க்கை

Added : நவ 20, 2020
Share
Advertisement
கரூர்: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, வழங்கிய உள் ஒதுக்கீட்டின் படி, 10 மாணவ, மாணவியருக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், மருத்துவ படிப்பில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேருவதற்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசால் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, கவுன்சிலிங்

கரூர்: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, வழங்கிய உள் ஒதுக்கீட்டின் படி, 10 மாணவ, மாணவியருக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், மருத்துவ படிப்பில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேருவதற்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசால் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, கவுன்சிலிங் துவக்கமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று முன்தினம் முதல் நடத்து வருகிறது. இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 313 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 92 பி.டி.எஸ்., இடங்கள் என, 405 இடங்கள், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் நடத்த கலந்தாய்வில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 10 அரசு பள்ளி மாணவ, மாணவியர், கரூர் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர். இதன்படி, நேற்று அவர்களுக்கு சேர்க்கை நடந்தது. மாணவ, மாணவியருக்கு, டீன் அசோகன் சேர்க்கைக்கு உரிய ஆணையை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X