பொது செய்தி

தமிழ்நாடு

ஏலத்தை ரத்து செய்ய கலெக்டரிடம் மனு

Added : நவ 20, 2020
Share
Advertisement
குளித்தலை: கொசூர் பஞ்சாயத்து, தந்திரி கிராமத்தை சேர்ந்த மருதமுத்து, ஒந்தன், முத்து ஆகிய ஏலதாரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், கரூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குளித்தலை அடுத்த, பண்ணப்பட்டி கிராமத்தில், பொதுப்பணித்துறையின், நீர்வள ஆதாரத்துறை அரியாறு வடிநில பாசன பிரிவுக்கு சொந்தமான, 350க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில், சீமை கருவேல

குளித்தலை: கொசூர் பஞ்சாயத்து, தந்திரி கிராமத்தை சேர்ந்த மருதமுத்து, ஒந்தன், முத்து ஆகிய ஏலதாரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், கரூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குளித்தலை அடுத்த, பண்ணப்பட்டி கிராமத்தில், பொதுப்பணித்துறையின், நீர்வள ஆதாரத்துறை அரியாறு வடிநில பாசன பிரிவுக்கு சொந்தமான, 350க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் தொடர்பாக, கடந்த அக்.,6ல், குளித்தலை அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட்டது. இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள மரங்களை, மிகவும் குறைந்த மதிப்பில், 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். எனவே, ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X