கரூர்: அரவக்குறிச்சி அருகே, கணக்குப்பிள்ளைபுதூரில், நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதில், ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சியின் தெற்கு பகுதியில் பெய்யும் மழை மற்றும் பரப்பலாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாகும். இங்கு, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின், 5,000 ஏக்கர் பாசனத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது, தடுப்பணையில் மணல் மூடி கிடக்கிறது. இதனால், மழை காலங்களில் குறைவாகவே நீர் சேமிக்கப்படுகிறது. எனவே, மழைக்காலம் முடிவதற்குள் தடுப்பணையை தூர் வார வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE