கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தரகம்பட்டியில் அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. அதேபோல, அங்கன்வாடி மையங்கள், கிளை நூலகம் ஆகியவையும், தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன. இங்கு, ஏராளமான அரசு புறம் போக்கு நிலங்கள் வீணாக கிடக்கின்றன. இவற்றில் புதிய கட்டடங்களை கட்டி, அரசு அலுவலகங்களை கொண்டு வரலாம். இதனால், அரசுக்கு ஏற்படும் நிதி சுமையை குறைக்க முடியும் என, அனைத்து தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE