ரெம்டெஸிவர் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஜெனிவா: ரெம்டெஸிவர் கொரோனா தடுப்பு மருந்து உலகம் முழுவதும் புகழ் பெற்று வந்தது. குறிப்பாக அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட மேலை நாடுகளில் நோயாளிகளுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. கில்லெட் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்து கொரோனாவை போக்கும் ஆற்றல் கொண்டதாக நம்பப்பட்ட நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பு மருந்துக்கு தடை
WHO, Against, Remdesivir, Hospitalised, Covid-19, Patients, ரெம்டெஸிவர், தடுப்பு மருந்து, உலக சுகாதார நிறுவனம், தடை

ஜெனிவா: ரெம்டெஸிவர் கொரோனா தடுப்பு மருந்து உலகம் முழுவதும் புகழ் பெற்று வந்தது. குறிப்பாக அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட மேலை நாடுகளில் நோயாளிகளுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. கில்லெட் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்து கொரோனாவை போக்கும் ஆற்றல் கொண்டதாக நம்பப்பட்ட நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பு மருந்துக்கு தடை விதித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்தை வழங்கக்கூடாது என கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம். நோயாளிகள் எந்த வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படக்கூடாது எனக் கூறியது பலருக்கு ஏன் என்ற கேள்வியை எழுப்பியது. இதனால் தற்போது கில்லெட் நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத் தலைமை அலுபலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ; ‛ரெம்டெசிவர் நோயாளிகளின் வைரஸ் தாக்கத்தை குறைக்கும் என்றோ, செயற்கை சுவாசம் அளிக்க தேவையில்லை என்றோ எந்தவித ஆதாரமும் இல்லை,' என தெரிவித்துள்ளது.


latest tamil news



கொரோனா நோயாளிகளின் மரணத்தைத் தவிர்க்கும் தடுப்பு மருந்து என்ற பெயரை முன்னதாக இந்த தடுப்பு மருந்து பெற்று இருந்தது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் இது கொரோனாவைத் தடுக்கும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த மருந்தை விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு எடுத்திருந்தது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் தங்கள் ஆய்வு குறித்து கூறுகையில் 7,000 நோயாளிகளை வைத்து தாங்கள் சோதனை மேற்கொண்டதில் இந்த முடிவு வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு கண்டிப்பாக இந்தத் தடுப்பு மருந்தை கொடுக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் கட்டாயமாக தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் 5 லட்சம் டோஸ் ரெம்டெஸிவர் தடுப்பு மருந்தை வாங்க ஒப்பந்தம் இட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-நவ-202004:35:12 IST Report Abuse
J.V. Iyer முன்னுக்கு பின் முரணாக உள்ளதே சுடலையின் ஆதிக்கம் அங்கும் உள்ளதா?
Rate this:
Cancel
Krishnan - Bengaluru,இந்தியா
20-நவ-202022:11:36 IST Report Abuse
Krishnan சீனாவிலிருந்து மருந்து தயாராகும்வரை காத்திருக்கவும்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
20-நவ-202021:24:01 IST Report Abuse
Sivagiri காசு - பணம் - துட்டு - மனி - மனி - தட்சிணை அல்லது தசம பாகம் - - இன்னும் பல . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X