அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜன., 5ல் பிரசாரத்தை துவக்குகிறார் ஸ்டாலின்

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஜன.,5 முதல் பிரசாரத்தை துவங்குவதாக அக்கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேரு கூறியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ‛விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் ஜன., 5 ல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தை துவங்குகிறார். 15 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து 1,500 கூட்டங்கள் நடத்தி 500 உள்ளூர்
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஜன.,5 முதல் பிரசாரத்தை துவங்குவதாக அக்கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ‛விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் ஜன., 5 ல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தை துவங்குகிறார். 15 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து 1,500 கூட்டங்கள் நடத்தி 500 உள்ளூர் நிகழ்ச்சிகளை நடத்தும் அவர், சுமார் 10 லட்சம் மக்களை சந்திக்கும் வகையில் இந்த பயணம் அமையும். இந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசு என்னென்ன செய்ய தவறியிருக்கிறது.


latest tamil news



என்ன காரியங்களை தவறாக செய்திருக்கிறார்கள், தி.மு.க., கட்சியில் என்னென்ன திட்டங்கள், எப்படி செயல்படுத்தப்படும் என்பதை இந்த பயணங்களில் எடுத்து செல்வோம். பா.ஜ., அரசின் திட்டங்களுக்கு அனுமதிதந்து மாநில உரிமைகளை விட்டு கொடுத்து சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்த ஆட்சியை கலைக்கும் விதத்தில் இந்த பயணம் நடக்கும். இந்த பிரசாரம் 75 நாட்கள் நடக்கும். 15 தலைவர்கள் பங்கேற்பார்கள்.

முதலாவதாக, திருக்குவளையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பிரசாரத்தை துவங்குகிறார். 29ம் தேதியில் இருந்து கனிமொழி பிரசாரத்தை துவங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.chandrasekaran - channai,இந்தியா
21-நவ-202005:48:59 IST Report Abuse
r.chandrasekaran பிஜேபி வெற்றி தமிழகத்தில் பிஜேபி ஆட்சி
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-நவ-202004:38:42 IST Report Abuse
J.V. Iyer பாப்பு ராகுல்ஜீ ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ பேசுவார். எனவே அவரின் சிரிப்பு வெடிகள் தமிழ் மக்களுக்கு புரியாது என்ற குறையை போக்க தமிழ்நாட்டு ராகுல்ஜி, அதாவது சுடலை வருகிறார். பராக். பேசி மக்களை மகிழ்விப்பார். சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சம் இருக்காது. மக்களே கவலையை மறந்து சிரியுங்கள்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
20-நவ-202023:33:04 IST Report Abuse
Allah Daniel அப்பிடியே, தியமுக, குடும்ப அரசியலுக்கு எதிரானது..அப்படினு சொல்லிடுங்க...முழுக்கிருக்க ஆகிடலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X