பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,23ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் வரும் 23ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது தாழ்வு மண்டலமாக உருமாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி செல்லும்.மழைக்கு வாய்ப்பு குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 8 மாவட்டங்களில் மிதமான
வங்கக்கடல், காற்றழுத்த தாழ்வு பகுதி, சென்னைவானிலைமையம்,

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் வரும் 23ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது தாழ்வு மண்டலமாக உருமாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி செல்லும்.


மழைக்கு வாய்ப்பு


குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யலாம்.


latest tamil news



சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X