பொது செய்தி

இந்தியா

இந்திய எல்லை அருகே சீனா உருவாக்கிய கிராமம்: டிரெண்டிங்கில் அலர்ட்

Updated : நவ 21, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய எல்லை அருகே பூடானில், சீனா ஒரு கிராமத்தை உருவாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், இது அண்டை நாடுகளை அச்சுறுத்தும் செயலாகவே பார்க்கப்படுவதாக டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து Bhutan என்னும் சொல் டுவிட்டரில் டிரெண்டானது.சீனா, தனது அண்டை நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பிற நாடுகளின் நிலப்பகுதிகளை
Bhutan, Twitter, Trending, பூடான், கிராமம், சீனா, டுவிட்டர், டிரெண்ட்

புதுடில்லி: இந்திய எல்லை அருகே பூடானில், சீனா ஒரு கிராமத்தை உருவாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், இது அண்டை நாடுகளை அச்சுறுத்தும் செயலாகவே பார்க்கப்படுவதாக டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து Bhutan என்னும் சொல் டுவிட்டரில் டிரெண்டானது.

சீனா, தனது அண்டை நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பிற நாடுகளின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்தல், எல்லையில் ராணுவத்தினருடன் சண்டையிடுதல் என சீனாவின் செயல்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிடையே கோபத்தை கிளப்பியது. இந்தியா - சீனா இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வரும் மோதல் போக்கை அடுத்து, பல இடங்களில் இரு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. நிலைமையை சுமூகமாக்க ராணுவம் மற்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


latest tamil news


இந்தியா - சீனா எல்லைக்கு அருகே, பூடான் எல்லையான டோக்லாம் பகுதியில், சீனா புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தின் புகைப்படங்களும் சீனா ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமம் பூடானின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால் அந்நாட்டு அரசின் அனுமதி பெற்று உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பூடான் அரசின் ராணுவம் மிகவும் சிறியது. எனவே, அதற்கு இந்தியாதான் தொடர்ந்து உதவி வருகிறது.

இதனால், பூடானை ஆக்கிரமித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த இந்த கிராமத்தை சீனா உருவாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய கிராமம் 2017-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே மோதல் நடைபெற்ற டோக்லாமில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆனால், பூடான் நாட்டிற்குள் சீனர்களின் கிராமம் எதுவும் இல்லை என இந்தியாவுக்கான பூடான் நாட்டு தூதர் மறுத்துள்ளார். அப்படியெனில் சமூக வலைதளங்களில் வெளியான கிராமம் தொடர்பான படங்கள் குறித்து பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.


latest tamil news


சீனர்கள் உண்மையில் கிராமத்தை உருவாக்கினார்களா அல்லது அது போன்ற ஒரு எச்சரிக்கையை சீனா தரப்பில் அண்டை நாடுகளுக்கு விடுக்கப்படுகிறதா என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், ‛சீனா நிச்சயமாக பூடானில் கிராமத்தை உருவாக்கியிருக்கும்,' என கருத்து தெரிவித்தனர். இந்திய எல்லை அருகே சீனா உருவாக்கியதாக கூறப்படும் இந்த கிராமம், அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க துடிக்கும் சீனாவின் அராஜகத்தையே காட்டுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து டுவிட்டரில் Bhutan என்னும் சொல் டிரெண்டானது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-நவ-202007:50:03 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இது நம்பக்கூடியதுதான். சீனா என்றுமே நேர்மையாக நடந்ததில்லை
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
21-நவ-202005:12:39 IST Report Abuse
Bharathi இன்னமும் நம்ம ஜனங்க சீன பொருட்களை வாங்கிக்கிட்டு தான் இருக்காங்க. பேராசை பிடித்த வியாபாரிகளும் நம்ம நாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காம அங்கிருந்துதான் இறக்குமதி பண்ணிக்கிட்டிருக்காங்க. இந்திய மக்களுக்கு சொரணை போதாது. மொத்தமாக புறக்கணிக்க வேண்டாமா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-நவ-202004:33:18 IST Report Abuse
J.V. Iyer பூடானுக்கு உடனே இந்தியாவின் ராணுவ உதவி தேவை. மெத்தனமாக இருக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X