பொது செய்தி

தமிழ்நாடு

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிதி

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருநெல்வேலி: காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உயிரிழந்த, தூத்துக்குடி, கோவில்பட்டி திட்டங்குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர்செந்தில் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் விஜயா ஆகியோர் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், கடம்பூர் ராஜு அவரது சொந்த
காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிதி

திருநெல்வேலி: காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உயிரிழந்த, தூத்துக்குடி, கோவில்பட்டி திட்டங்குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர்செந்தில் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் விஜயா ஆகியோர் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், கடம்பூர் ராஜு அவரது சொந்த நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். ராணுவ வீரர் கருப்பசாமி குழந்தைகளின் கல்விக்கும் அவரது மனைவி தமயந்தியின் வேலைவாய்ப்புக்கும் அரசு தரப்பில் முழு உதவி செய்யப்படும் என தெரிவித்தார்.

கருப்பசாமி வீட்டிற்கு சென்ற தி.மு.க., எம்.பி., கனிமொழி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

ராணுவ வீரர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X