டாக்டர்கள் அறிவுரை: கோவா சென்றார் சோனியா

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
பனாஜி: உடல்நலனை கருத்தில் கொண்டு, சில நாட்களுக்கு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா டில்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தார். அவருடன் ராகுலும் வந்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக, பல முறை அமெரிக்கா சென்று
congress,  sonia, soniagandhi, rahul, rahulgandhi, cong, delhi, goa, காங்கிரஸ், காங்., சோனியா, சோனியாகாந்தி, ராகுல், ராகுல்காந்தி, டில்லி, கோவா

பனாஜி: உடல்நலனை கருத்தில் கொண்டு, சில நாட்களுக்கு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா டில்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தார். அவருடன் ராகுலும் வந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக, பல முறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகினார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி காரணமாக ராகுல், பதவி விலகியதை தொடர்ந்து சோனியா மீண்டும் இடைக்கால தலைவர் ஆக பொறுப்பேற்று கொண்டார்


latest tamil news



ஏற்கனவே, ஆஸ்துமா பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வரும் சோனியாவுக்கு, நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. டில்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளதால், டில்லியில் இருந்து வெளியேறி, வேறு இடத்திற்கு அழைத்து செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தார்.



Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-நவ-202011:57:24 IST Report Abuse
Malick Raja நாடுதான் நல்ல வளர்ச்சியில் இருக்கிறது .. பெட்ரோல் டீசல் விலை 100, ரூ க்கு வந்தே...... தீரும் ..வந்தே .. தீரும் நாடு பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி - ல் இருக்கிறது .. அடேங்கப்பா பிஜேபி ஆட்சியில் அனைத்திலும் வளர்ச்சியோ வளர்ச்சி .. போடுங்கப்பா ஒட்டு ...
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
21-நவ-202007:33:04 IST Report Abuse
Elango நிரந்தரமாக ஒய்வு எடுத்து உடல் நிலையை கவனிக்க வேண்டும்.... கட்சியை ஒரு துடிப்பான இளைஞரிடம் ஒப்படைக்க வேண்டும் (ராகுல் அல்ல)
Rate this:
Cancel
21-நவ-202006:20:09 IST Report Abuse
இராமன் டாக்டர், இவர்கள் ஆரோக்கியமாக இருக்க இத்தாலியில் நிரந்தரமாக இருப்பது மிக அவசரம் என்று வலியுறுத்துங்கள். தாமதித்தால் பப்புவுக்கு நல்லதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X