பொது செய்தி

தமிழ்நாடு

திருச்செந்துார் கடற்கரையில் பக்தர்களின்றி சூரசம்ஹாரம்

Updated : நவ 21, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
துாத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நேற்று பக்தர்கள் இல்லாமல் நடந்தது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.15ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. தங்கதேர் வீதி உலா நடக்கவில்லை. சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு
soorasamharam, சூரசம்ஹாரம்

துாத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நேற்று பக்தர்கள் இல்லாமல் நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.15ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. தங்கதேர் வீதி உலா நடக்கவில்லை. சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது. மதியம் ஒரு மணியளவில் ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். மாலை 4:10 மணிக்கு ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதின மண்டபத்தில் எழுந்தருளினார்.மாலை 4.33 மணிக்கு கோயில் கடற்கரை முகப்பில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி துவங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.


latest tamil news



கடற்கரையில் கோயில் முன்பாக கடற்கரையில் 300 அடி நீளத்திற்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கு கஜமுகனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து சிங்கமுகனாகவும், பின்னர் சுயரூபமான சூரபத்மனையும் வதம் செய்தார். பின்னர் சேவலாகவும், மாமரமாகவும் போரிட்ட சூரனை முருகப்பெருமான் ஆட்கொண்டார்.விழாவில் பங்கேற்றவர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் ஞானசம்பந்தர், கலெக்டர் செந்தில்ராஜ், ஐ.ஜி.,முருகன், டி.ஐ.ஜி.,பிரவீன்குமார் அபினபு, எஸ்.பி., ஜெயக்குமார், தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர்(பொறுப்பு) கல்யாணி பங்கேற்றனர். எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பங்கேற்கவில்லை.


பழநி


பழநி மலைக்கோயிலில் நேற்று சூரசம்ஹராத்தை முன்னிட்டு மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. சின்னக்குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கி கிரிவீதிக்கு புறப்பட்டதும் சன்னதி சாத்தப்பட்டது.திருஆவினன்குடிகோயிலில் பராசக்திவேலுக்கு பூஜை செய்து சுவாமி தங்கமயில் வாகனத்தில் வடக்கு கிரிவீதியில் கஜமுகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்தார். இரவில் அர்த்தஜாம பூஜை நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு மேல் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

இதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், சுவாமி மலை சுவாமிநாதர் கோயில், திருத்தணி சண்முகர், சோலைமலை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா, சூர சம்ஹாரம் நடந்தது. பக்தர்கள் அனுமதிக்கபடவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-202011:15:34 IST Report Abuse
ஆப்பு 2000 போலீஸ் இருந்தாங்களே... சூரபத்மனை கைது செய்யலியா? என்கவுண்ட்டர் மாதிரி ஆயிடுச்சே...
Rate this:
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
21-நவ-202010:06:40 IST Report Abuse
mariyappangopinathan ரெண்டாயிரம் போலீஸுங்கறதே ஒரு பெரிய கூட்டம் தானே? அப்ப கூட்டம் சேரலைன்னு இவங்க எப்படி சொல்லுறாங்கன்னே தெரியலையே.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-நவ-202007:34:49 IST Report Abuse
Sampath Kumar ஓ உங்க வேல் யாத்திரை மாதிரியா ? பாவம் முருகன்
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-நவ-202013:04:59 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅடப்பாவமே. பிஹாரில் மரண அடி வாங்கி விட்டு ஐயோ பாவம் என்று வாயே திறக்காமல் இருக்கும் பப்பு தான் ரொம்ப ரொம்ப பாவம். ஹூம் . இதையும் ஜீரணித்துக்கொள்ள வேண்டியது தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X