சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்எலும்பு இல்லா உயிரினம்நத்தையில் பல இனங்கள் உள்ளன. இவை நிலம், குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற இடங்களில் வாழ்கின்றன. எலும்புகள் இல்லாத உயிரினங்களுள் இதுவும் ஒன்று. இவற்றுக்குக் கால்கள் இல்லை. அதன் அடிப்பாகம் முழுவதும் தட்டையான பாதம்போல செயல்படும். வயிற்றுப்பகுதியை உந்தித் தள்ளி ஊர்ந்து செல்லும். இதற்கு அவற்றிடம் உள்ள வழவழப்பான பிசின் உதவுகிறது. மிக

அறிவியல் ஆயிரம்
எலும்பு இல்லா உயிரினம்

நத்தையில் பல இனங்கள் உள்ளன. இவை நிலம், குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற இடங்களில் வாழ்கின்றன. எலும்புகள் இல்லாத உயிரினங்களுள் இதுவும் ஒன்று. இவற்றுக்குக் கால்கள் இல்லை. அதன் அடிப்பாகம் முழுவதும் தட்டையான பாதம்போல செயல்படும். வயிற்றுப்பகுதியை உந்தித் தள்ளி ஊர்ந்து செல்லும். இதற்கு அவற்றிடம் உள்ள வழவழப்பான பிசின் உதவுகிறது. மிக மெதுவாகச் செல்லும் நத்தைகள், சராசரியாக விநாடிக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் நகரும். இது தன் உடல் எடையைவிட, பத்து மடங்கு எடை வரையிலான பொருட்களைத் துாக்கிச் செல்லும்.
தகவல் சுரங்கம்
உலக ஹலோ தினம்

எகிப்து - இஸ்ரேல் தங்களுக்கிடையே 1973ல் ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். பின் பல நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது இத்தினத்தின் நோக்கம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து 'ஹலோ' வந்துள்ளது. இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X