சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தி வரப்பட்ட ரூ.4.82 கோடி மதிப்பிலான தங்கம், ஐபோன்கள் * வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
கோவை: சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, ரூ.4.82 கோடி மதிப்பிலான தங்கம், ஐபோன்கள், டிரோன்கள், சிக்ரெட்களை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தீபாவளி பண்டியை முன்னிட்டு சார்ஜாவில் இருந்து கடத்தல் கும்பல் மூலம் கோவைக்கு தங்கம், ஐபோன்கள், டிரோன்கள், சிக்ரெட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து
 கடத்தி வரப்பட்ட ரூ.4.82 கோடி மதிப்பிலான தங்கம், ஐபோன்கள் * வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல்

கோவை: சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, ரூ.4.82 கோடி மதிப்பிலான தங்கம், ஐபோன்கள், டிரோன்கள், சிக்ரெட்களை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டியை முன்னிட்டு சார்ஜாவில் இருந்து கடத்தல் கும்பல் மூலம் கோவைக்கு தங்கம், ஐபோன்கள், டிரோன்கள், சிக்ரெட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குனரக துணை இயக்குனர் சதீஸ் தலைமையிலான அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த, 14 ம் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவை வந்தது. அதில் பயணம் செய்த கேரள மாநிலம் காசர்கோடு, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளை சேர்ந்த, 15 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தினர். சோதனையில் பசை வடிவில் தங்கம் மாற்றப்பட்டு உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.3.26 கோடி மதிப்பிலான ஆறு கிலோ தங்கம் மற்றும் ஒரு கிலோ தங்கச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர, ரூ.1.03 மதிப்பிலான ஆறு லட்சம் சிக்ரெட்டுகள், ரூ.53 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள், ட்ரோன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட, 15 பயணிகள் அனைவரும், 25 - 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய தங்கக் கடத்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X