சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தேவையா இது?

Added : நவ 20, 2020
Share
Advertisement
தேவையா இது?'வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கலாமா' என, தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், கே.டி.ராமா ராவ் பற்றி, எரிச்சலுடன் பேசுகின்றனர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மூத்த தலைவர்கள். கே.டி.ராமா ராவ், தெலுங்கானா மாநில முதல்வரும், டி.ஆர்.எஸ்., கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகன். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு, பலரது
அக்கம் பக்கம்


தேவையா இது?



'வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கலாமா' என, தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், கே.டி.ராமா ராவ் பற்றி, எரிச்சலுடன் பேசுகின்றனர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மூத்த தலைவர்கள். கே.டி.ராமா ராவ், தெலுங்கானா மாநில முதல்வரும், டி.ஆர்.எஸ்., கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகன். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு, பலரது பாராட்டுக்களையும் பெற்றவர்.சமீப காலமாக, பா.ஜ.,வினருடன், அவர் வாய் சண்டையில் இறங்குவது, கட்சியின் மூத்த தலைவர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், பா.ஜ.,வினர் செயல்பட்டதாக, ராமா ராவ் குற்றம் சாட்டினார். 'மாநிலம், அமைதிப் பூங்காவாக செயல்படுவது, பா.ஜ.,வினருக்கு பிடிக்கவில்லை.

ஆட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர்' என்றார். அடுத்த நாளே, இதற்கு பதிலடி வந்தது. 'சட்டசபை இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, டி.ஆர்.எஸ்., கட்சியினர் 40 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படும்' என, பா.ஜ., சார்பில் அறிக்கை வெளியானது. இதைக் கேள்விப்பட்ட, டி.ஆர்.எஸ்., நிர்வாகிகள், 'பா.ஜ.,வை உசுப்பேற்றலாமா... சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என, வரிசை கட்டி வருவரே... இவருக்கு இது தேவையா' என, புலம்புகினறனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X