சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, இதுவரை காவிரி டெல்டாவில் உள்ள, அ.தி.மு.க., அமைச்சர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. ஏன், முதல்வரோ, தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை; மத்திய அரசுக்கு, தமிழக அரசு பயந்து நிற்கிறது.'டவுட்' தனபாலு: ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என கூறுவரே... அதுபோல, உங்களுக்கு


'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, இதுவரை காவிரி டெல்டாவில் உள்ள, அ.தி.மு.க., அமைச்சர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. ஏன், முதல்வரோ, தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை; மத்திய அரசுக்கு, தமிழக அரசு பயந்து நிற்கிறது.

'டவுட்' தனபாலு: ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என கூறுவரே... அதுபோல, உங்களுக்கு புதிதாக எந்தப் பிரச்னையும் கிடைக்கவில்லை என்றால், டெல்டா, ஹைட்ரோ கார்பன் என, பழையக் களியைக் கிண்ட துவங்கி விடுவீர்கள். எனினும், அந்த பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு எதையும் செய்ய மாட்டீர்கள். எப்போது தான், இதை, அந்த பகுதி மக்கள் புரிந்துக் கொள்வரோ என்பது தான், நடுநிலையாளர்களின், 'டவுட்' ஆக உள்ளது!
பிரதமர் மோடி:இன்று, உலகம் சந்திக்கும் பெரிய பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை பொறுப்பாளர்களாக்குவதை உறுதிபடுத்துவதுடன், இந்த பிரச்னையை அமைப்பு ரீதியாக கையாள வேண்டும். இதை ஒழிக்க, கொரோனா காலத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.



'டவுட்' தனபாலு: இப்போதைய பிரதமர் முதல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வரை, பலமுறை உலக அரங்குகளில், பயங்கரவாதத்தை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ள நிலையிலும், பயங்கரவாதம் இன்றும் அறுபடவில்லையே ஏன் என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. இதன் மூலம், உலக நாடுகள் இன்னமும் ஒன்றிணைந்து செயல்படவில்லையோ என்ற டவுட் உறுதியாகிறது!



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
மத்திய அல்லது மாநில அரசின் மருத்துவப் பணியாக இருந்தாலும், அதற்கான பணி வரம்புகளும், கல்வித் தகுதியும் ஒன்று தான். ஆனால், மாநில அரசு டாக்டர்களின், 14வது ஆண்டு பணிக்காலத்தில் துவக்கி, பணி ஓய்வு பெறும் வரை, மத்திய அரசு டாக்டர்களை விட, 45 ஆயிரம் ரூபாய் வரை குறைவான ஊதியம் பெற வேண்டியிருக்கிறது. உயிர்காக்கும் பணியில், அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடும் டாக்டர்களுக்கு, இதைவிட மோசமான அநீதியை இழைக்க முடியாது.

'டவுட்' தனபாலு: எம்.எல்.ஏ.,க்களுக்கும், எம்.பி.,க்களுக்கும் சம்பளம் வித்தியாசம் இருக்கும்போது, அதுபற்றி குரல் கொடுக்காத நீங்கள், இப்போது அரசு டாக்டர்கள் சம்பளம் குறித்து குரல் கொடுப்பது பல விதமான, 'டவுட்'டுகளை ஏற்படுத்துகிறது. எப்படியோ, அரசு டாக்டர்களுக்கு சமமான ஊதியம் கிடைத்தால் சரி தான்!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skandh - Chennai,இந்தியா
21-நவ-202008:05:05 IST Report Abuse
skandh HYDROCARBON ,METHANE எல்லாம் கொண்டு வந்தது நீதானே . நீதான் பேசணும். தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் தீமுக தான்.இனியும் இந்த கட்சியை விட்டு வைத்தால் தமிழ்நாட்டையே ஆட்டைய போடுவார்கள். 2021 தேர்தலோட தீமுக புள் பொண்டில்லாமல் ஒழிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-நவ-202005:59:30 IST Report Abuse
D.Ambujavalli ஐ நா கூட்டத்துக்குப் போவதும், வாய்ப்பாடு படிப்பதுபோல் பயங்கரவாதத்துக்கு எதிர்க்குரல் கொடுப்பதும் ஒரு சடங்குபோல் தன நடக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X