சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அரசியல் புகுந்ததால் வந்த வினை!

Added : நவ 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
அரசியல் புகுந்ததால் வந்த வினை!என்.எஸ்.வெங்கடராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் சிலர், தங்களின் அரசியல் லாபத்திற்காக, பல்கலை குறித்து அடிப்படை ஏதும் இல்லாமல், அவதுாறு பரப்புவது வேதனை அளிக்கிறது.தமிழக அரசு, அண்ணா பல்கலை துணைவேந்தர் மீதான புகார் குறித்து விசாரிக்க, ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதை, பல்கலையில் பணிபுரியும் பேராசியர்கள்

இது உங்கள் இடம்


அரசியல் புகுந்ததால் வந்த வினை!என்.எஸ்.வெங்கடராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் சிலர், தங்களின் அரசியல் லாபத்திற்காக, பல்கலை குறித்து அடிப்படை ஏதும் இல்லாமல், அவதுாறு பரப்புவது வேதனை அளிக்கிறது.தமிழக அரசு, அண்ணா பல்கலை துணைவேந்தர் மீதான புகார் குறித்து விசாரிக்க, ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதை, பல்கலையில் பணிபுரியும் பேராசியர்கள் கண்டித்துள்ளனர். துணைவேந்தர் சுரப்பா குறித்து, அவர்களுக்கு நல்லெண்ணமே உள்ளது.சில அரசியல்வாதிகள், அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா குறித்து, அவதுாறு பரப்பி வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? அரசியல்வாதியின் கைப்பாவையாக, அவர் இயங்காதது தானோ என்ற சந்தேகம், பலருக்கும் ஏற்பட்டுள்ளது.தகுதியின் அடிப்படையில், தேர்வு செய்யும் குழுவின் பரிந்துரையின்படி, அண்ணா பல்கலை துணைவேந்தராக, சுரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது தகுதியையும், அவர் முன்பு வகித்த பதவிகளையும் நோக்கினால், அரசியல்வாதிகளின் ஆணைப்படி, பல்கலை நிர்வாகத்தை நடத்த வேண்டிய நிர்பந்தம், அவருக்கு ஏதும் இல்லை என்பது தெளிவாக புரியும்.அவர் பதவியேற்ற நாள் முதல், 'அண்ணா பல்கலை துணைவேந்தராக, தமிழர் தான் பதவியேற்க வேண்டும்' என, தமிழினப் போர்வையாளர்கள் கோஷமிடுகின்றனர். இது நியாயமா, ஏற்கக்கூடிய கருத்தா?உலகெங்கிலும், பல புகழ்பெற்ற பல்கலைகளில், தமிழர்கள் பலர் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். பல்கலை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும், தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழர் பணியாற்றக் கூடாது என, எங்கும், யாரும் கூறவில்லை. தமிழகத்தில் மட்டுமே, இந்த அவல நிலை உள்ளது.கல்வித் துறையில் துணைவேந்தர் மற்றும் பேராசிரியரை நியமிக்கும் போது, அவரின் நிறம், ஜாதி, சொந்த நாடு என்ற அடிப்படையில் செயல்படுவது, அநாகரிகம்; முட்டாள்தனம்.கல்வித் துறையில், அரசியல் புகுந்ததால் வந்த வினை, இது. தமிழகத்தில், கல்வி நிர்வாகத்திற்கும், அரசியலுக்கும் வேறுபாடு இல்லாமல் காணப்படுகிறது.இதற்கு முன், தமிழக அரசு, அண்ணா பல்கலையை இரண்டாக பிரிப்பது என, முடிவு செய்தது. இதற்கு மாணவர்களும், பேராசியர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலையை இரண்டாகப் பிரித்தால், ஒரு பிரிவை, சிறந்த ஆராய்ச்சி பல்கலையாக மாற்றி, மத்திய அரசிடமிருந்து கணிசமான தொகையை பெற முடியும் என்பதே, தமிழக அரசின் வாதம் ஆகும். இந்த முடிவை, துணைவேந்தர் விமர்சித்துள்ளார்.ஆனால், அரசின் முடிவை விமர்சிக்க, துணைவேந்தருக்கு உரிமை இல்லை என, தமிழக அரசு வாதாடுகிறது. அண்ணா பல்கலை நலன் குறித்து, துணைவேந்தர் கருத்து தெரிவிக்கக் கூடாது என்பது, எந்த வகையில் நியாயம்?நிதி திரட்டுவதற்கு, வேறு மேலான வழிகள் உள்ளன எனக் கூறுகிறார், மூத்த பேராசிரியரான, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா.அண்ணா பல்கலையில் பயின்ற பலர், உலகெங்கிலும் பல்வேறு உயர் பதவியில் இருக்கின்றனர். அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் இயங்கும் பல்கலையாக மாறினால், தேவைக்கு அதிகமாகவே, உலகெங்கிலும் இருந்து நிதி கிடைக்கும் என்பதில், எந்தவித சந்தேகமும் இல்லை.


மழை நீருக்கு வழி விடுங்கள்!ஜி.கே.அழகுராஜா,தத்தனேரி, மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மழைக் காலம் வந்தால், பல, டி.எம்.சி., நீர் வீணாக சென்று, கடலில் கலக்கும்; கோடையில், தண்ணீர் கிடைக்காமல், மக்கள் காலி குடங்களுடன் அலைவர். காலம் காலமாக நடக்கும் இந்த கொடுமை, நம் நாட்டின் சாபக்கேடு!இதை தீர்க்க, சரியான திட்டமிடலுடன், முன்எச்சரிக்கையுடன், எந்த அரசும் செயல்பட்டதில்லை. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தான், இப்பிரச்னைக்கு தீர்வாகும்; ஆனால் அதை, எந்த அரசும் செய்வதில்லை.விளைநிலங்களாக இருந்தபோது, சாலையோரத்தில், மழை நீர் கால்வாய் இருந்தது; தண்ணீர், கால்வாய் வழியே சென்று, நீர்நிலையை அடைந்தது.விளைநிலங்கள், குடியிருப்பு பகுதியாக மாறின. குடியிருப்புக்கு மக்கள் சென்று வர, கால்வாயை அடைத்து, பாதை அமைத்தனர். அதுவே, எங்கும் ஆக்கிரமிப்பாக மாறியது. கால்வாயை அடைத்துவிட்டால் மழை நீர், குடியிருப்பை சூழாமல் வேறு என்ன செய்யும்?யானை செல்லும் பாதையை ஆக்கிரமித்து, கட்டடம் கட்டினால், அது, பாதை மாறி ஊருக்குள் தான் வரும்.முதலில், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றினால், ஓட்டு பாதிக்கப்படும் என, ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது. மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, துார் வார வேண்டும். மழை நீர், எளிதாக நீர் நிலையை சென்றடைய, வழி ஏற்படுத்த வேண்டும்.இதனால், மழைக்காலத்தில், குடியிருப்புகளை வெள்ளம் சூழாது; கோடையில், தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. அரசு, நடவடிக்கை எடுக்குமா?


இது சரியான பாதை அல்ல!ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தீபாவளி பண்டிகையைஒட்டி, 22 நாட்களில் மட்டும், தமிழகத்தில், 466 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்துள்ளது. இது, கடந்த ஐந்து ஆண்டு கால வசூலை முறியடித்து, சாதனை படைத்துள்ளதாம். நம் அரசு, எதில் எல்லாம் சாதனை படைக்கிறது!அடுத்ததாக, முகக்கவசம் அணியாதோரிடம் அபராதத் தொகையாக, 9.50 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.அரசுக்கு கிடைத்துள்ள, இந்த இரண்டு அபரிமிதமான வருவாய்களும், முகம் சுளிக்கும்படி சிறுமைப்பட வைக்கிறது.மது அருந்துவதால் ஏற்படும் தீமையை அரசும், ஊடகமும் எடுத்துரைத்தாலும், மது அருந்துவோர் எண்ணிக்கை குறையவில்லை. மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது, குடும்பத்திற்கும், நாட்டிற்கும் நல்லதல்ல.தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது என்பது, சாத்தியப்படாத விஷயமாக உள்ளது; ஆனால், அதை குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடலாம்.அதுபோல, கொரோனா நோய் தொற்று குறித்து அரசும், ஊடகமும் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், முகக்கவசத்தின் அவசியத்தை, மக்கள் அலட்சியப்படுத்துவது வேதனையாக உள்ளது.மது மற்றும் கொரோனா விஷயத்தில், இன்று நாம் செல்லும் பாதை, சரியானது அல்ல!

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
21-நவ-202006:35:54 IST Report Abuse
Darmavan எந்த அரசியல்வாதி /கட்சி மொழி இனம் ஜாதி அடிப்படையில் பேசுகிறதோ அவை தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்.பிரிவினைவாத சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க வேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-நவ-202006:11:58 IST Report Abuse
D.Ambujavalli இந்த மது விஷயத்தில் எல்லா கட்சிகளுமே கபட நாடகம் தான் ஆடுகின்றன. அவர்களின் ஆலைகளுக்கு லாபம் வர பார்ப்பார்களா, பொது மக்கள் ஆரோக்கியத்தை எண்ணிப் பார்ப்பார்களா? இது அவர்களின் காமதேனு எந்த சங்கு ஊதினாலும் அவர்கள் காதுக்கு கேட்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X