சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 20, 2020
Share
Advertisement
'ஒரு கட்சித் தலைவர், இன்னோவா கார் கொடுக்கிறேன் என்கிறார். நீங்கள், தங்கம் கொடுக்கிறேன் என்கிறீர்கள். எங்கே தான் பணத்தை வைத்திருக்கிறீர்களோ....' என, கேட்கத் தோன்றும் வகையில், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன் பேச்சு: போடி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் கட்சி நிர்வாகிக்கு, ௧ பவுன் தங்க நாணயம் வழங்கப்படும்.

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஒரு கட்சித் தலைவர், இன்னோவா கார் கொடுக்கிறேன் என்கிறார். நீங்கள், தங்கம் கொடுக்கிறேன் என்கிறீர்கள். எங்கே தான் பணத்தை வைத்திருக்கிறீர்களோ....' என, கேட்கத் தோன்றும் வகையில், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன் பேச்சு: போடி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் கட்சி நிர்வாகிக்கு, ௧ பவுன் தங்க நாணயம் வழங்கப்படும். அதை அடுத்து சேர்ப்பவர்களுக்கு, அரை பவுன் தங்க நாணயம் வழங்கப்படும்.


'உங்கள் ஆட்சியில் மழை பெய்யவில்லையா; அப்போது, எந்த நிறுவனத்தின் கண்ணாடி வாங்கினார்களோ அங்கு தான் இப்போதும் வாங்குகின்றனர்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணிச் செயலர் கனிமொழி அறிக்கை:
தமிழக அரசு பஸ்களின் கண்ணாடி, தரம் இல்லாமல் இருப்பதால், இரவு நேரத்தில், மழை பெய்யும் போது, சாலை தெளிவாக தெரியாமல், வாகனங்களை குறைந்த வேகத்திலேயே இயக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள் உயிரை பணயம் வைப்பதில், ஆள்பவர்கள் சம்பாதிப்பது எவ்வளவு?


'தொழிலாளர்கள் என்றிருந்தால், நாங்களும் இருப்போம் என்றும் சொல்லி விடுங்களேன்...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை:
முதலாளிகள் தான், 'செல்வ உற்பத்தியாளர்கள்' என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆனால் உண்மையில், தொழிலாளர்கள் இல்லாமல், தொழிலும் இல்லை; செல்வ வளங்களின் உருவாக்கமும் இல்லை என்பதை கொரோனா - ஊரடங்கு காலம் கண்கூடாக காட்டிவிட்டது.


'அப்பாடா, தமிழக காங்கிரசில், மீனவர் அணி என ஒரு அணி இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு வேலை கொடுக்கத் தயாராகி விட்டீர்கள் போலிருக்கிறதே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:
கடலில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தகுந்த தீர்வு காணப்படாவிட்டால், தமிழக காங்., மீனவர் அணியின் துணையுடன், சென்னையில், இலங்கை துாதரகம் முன், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.



'இதற்கெல்லாம், உங்கள் கட்சியினர் செய்யும் ரகளை தான் காரணம். தமிழகத்தில், அ.தி.மு.க., என்ற கட்சி ஆட்சியில் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல், 'அடுத்து வேல் ஆட்சி தான்' என்றால், தடை செய்யாமல் என்ன செய்யும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராகவன் பேட்டி:
அ.தி.மு.க., ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறது. வேல் யாத்திரைக்கு மட்டும் அனுமதி வழங்காமல், மற்ற அனைத்து போராட்டங்களுக்கும், அ.தி.மு.க., அரசு அனுமதி வழங்குகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X