சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஜூனியர் கீழ் சீனியர்களுக்குப் பணி!

Added : நவ 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜூனியர் கீழ் சீனியர்களுக்குப் பணி!''கேட்பாரற்றுக் கிடந்த, 150 கோடி ரூபா நிலத்தை தாரை வார்த்தவங்களோட வழக்கை, கிரைம் பிராஞ்ச் கிடப்புல போட்டுடுச்சு பா...'' என முதல் தகவலைத் துவக்கினார் அன்வர்பாய்.''என்ன வழக்குன்னு விவரமா செல்லும் ஓய்...'' என சுவாரசியத்துடன் கேட்டார் குப்பண்ணா.''சென்னைக்கு பக்கத்துல. தாழம்பூர் கிராமத்துல ஏராளமான ஏக்கர் நிலம், கேட்பாரத்து


டீ கடை பெஞ்ச்

ஜூனியர் கீழ் சீனியர்களுக்குப் பணி!

''கேட்பாரற்றுக் கிடந்த, 150 கோடி ரூபா நிலத்தை தாரை வார்த்தவங்களோட வழக்கை, கிரைம் பிராஞ்ச் கிடப்புல போட்டுடுச்சு பா...'' என முதல் தகவலைத் துவக்கினார்
அன்வர்பாய்.
''என்ன வழக்குன்னு விவரமா செல்லும் ஓய்...'' என சுவாரசியத்துடன் கேட்டார் குப்பண்ணா.
''சென்னைக்கு பக்கத்துல. தாழம்பூர் கிராமத்துல ஏராளமான ஏக்கர் நிலம், கேட்பாரத்து கிடக்கு... அதைப் பாதுகாத்து ஏழை எளியவங்களுக்கு பிரிச்சு வழங்கற வேலை, விழுப்புறத்துல இருக்குற நில சீர்திருத்தத் துறை தான்
கவனிக்கணும்...
'' அங்கு இருந்த ரெண்டு அதிகாரியும், செங்கல்பட்டு மாவட்டத்துல இருந்த ஒரு ஆர்.டி.ஓ., என மூணு பேரும், 150 கோடி ரூபா மதிப்புள்ள இந்த நிலத்தை, தனியாருக்கு தாரை வார்த்து காசு பார்த்துட்டாங்கபா...
''செங்கல்பட்டு மாவட்டத்தைப் பிரிச்சு புது கலெக்டர் போட்டப் பின்னாடி, இந்த விவகாரம் பூதாகரமா வெடிச்சிச்சு... போறா குறைக்கு, காஞ்சிபுரம் கிரைம் பிராஞ்ச் அதிகாரிகளும் இதை விசாரிச்சாங்க...
''இந்த வழக்குல சம்பந்தப்பட்ட அதிகாரிகள்ல ஒருத்தர் இறந்து போயிட்டாரு... மத்த ரெண்டு பேரும், முன் ஜாமின் கேட்டு கோர்ட்டுக்கு போனாங்க... அவுங்க பெட்டிஷன், டிஸ்மிஸ் ஆயிடுச்சு...
''என்ன காரணமோ தெரியலே... இப்ப, கிரைம் பிராஞ்ச் ஆபீசருங்க கையை, யாரோ கட்டிப் போட்டு, கேசே துாங்கிப் போச்சு பா...'' என்றார் அன்வர்பாய்.
''மகிழ்ச்சியில் இருக்காங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''ஒவ்வொரு மாவட்டத்திலும், மின் வாரியத்திற்கு, 'சென்ட்ரல் ஸ்டோர், சப் - ஸ்டோர்'னு இருக்கு... அதுல, மீட்டர், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின் வினியோகத்திற்கு உபயோகப்படுத்தற சாதனங்கள் இருக்கு...
''உதவிப் பொறியாளர்கள், தன்னோட பிரிவு அலுவலகத்திற்கு தேவைப்படும் சாதனங்களை, கம்ப்யூட்டர் மூலமா, 'ஸ்டோர் இன்சார்ஜ்' கிட்டே கேப்பாங்க...
''அவரும், ஆட்கள் மூலமா அந்தந்த பிரிவுக்குத் தேவையானதைக் குடுத்தனுப்புவாரு... இப்ப, ஸ்டோர்ல இருக்கற சில பேர், பொருட்கள் சப்ளை செய்ய பணம் கேக்குறாங்க...
''இதைக் கண்டுபிடிச்ச உயரதிகாரிகள், 'ஸ்டோர்ல இருக்கறவங்களை, நேரே அந்தந்த ஆபீசுக்கு வந்து குடுக்கச் சொல்லுங்க...'ன்னு உத்தரவு போட்டுட்டாங்களாம்... இதனால, உதவிப் பொறியாளர்கள்லாம் மகிழ்ச்சியில இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''சப்ளை பண்றப்ப, பணம் கேக்காம இருப்பான்னு என்ன ஓய் நிச்சயம்...'' எனக் கேட்ட குப்பண்ணா, கடைசித் தகவலுக்கு மாறினார்...
''அமைச்சர்களின் வளைவு, சுளிவுகளுக்கு நெளிந்து போகாத
சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, 'டம்மி போஸ்டிங்' தான் இங்கே...'' என்ற குப்பண்ணாவிடம், ''விளக்கமா சொல்லும் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''தமிழக வேலை வாய்ப்பு பயிற்சி துணை இயக்குனர் பதவிக்கு, ஜூனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தான், 'யூஷுவலா' நியமிப்பா... அந்த அதிகாரியின் கட்டுப்பாட்டுல, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்குகிறது...
''இந்த நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு, டி.ஆர்.ஓ., ரேங்குல இருக்கறவாளை நியமிக்கறது வழக்கம்...
''ஆனா, போக்குவரத்து, வீட்டுவசதி வாரியம்ன்னு ரெண்டு துறைகள்லேர்ந்தும்
சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருத்தரையும், தலைமைச் செயலர் கேடர்ல வேலை பார்த்தவர் ஒருவரையும் நியமிச்சுட்டா...
''இது சீனியர்ஸ் மத்தியில கொந்தளிப்பை உருவாக்கிடுத்து... மன உளைச்சல்ல இருக்கா ஓய் எல்லாரும்...'' என்றபடி குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-நவ-202006:04:43 IST Report Abuse
D.Ambujavalli அந்த நில விஷயத்தில் எந்த அமைச்சரோ, பெருந்தலையோ பயனாளியாக இருந்தால், கேஸ் சமாதிக்கே போய்விடுமே இதுதான் வழிமுறை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X