சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சேமிப்பு தான் எப்போதும் காப்பாற்றும்!

Added : நவ 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சேமிப்பு தான் எப்போதும் காப்பாற்றும்!மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும், தன் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகையை, முறையாக சேமித்து வருவது குறித்து, புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ்: ஒரு பிரச்னை வரும் போது, ஆயிரம் பேர் நம்முடன் இருப்பதை விட, நம்முடைய சேமிப்பு தான், நமக்கு யானை பலமாக இருக்கும். எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் கூலி வேலை பார்த்து தான், என்னை படிக்க வச்சாங்க.
 
சொல்கிறார்கள்

சேமிப்பு தான் எப்போதும் காப்பாற்றும்!

மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும், தன் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகையை, முறையாக சேமித்து வருவது குறித்து, புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ்: ஒரு பிரச்னை வரும் போது, ஆயிரம் பேர் நம்முடன் இருப்பதை விட, நம்முடைய சேமிப்பு தான், நமக்கு யானை பலமாக இருக்கும். எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் கூலி வேலை பார்த்து தான், என்னை படிக்க வச்சாங்க. ஒரு தம்பி, தங்கச்சி இருக்காங்க. 'கால் இல்லாத இவனை படிக்க வெச்சு என்ன ஆகப் போகுது'ன்னு நிறைய பேர் என் அப்பாகிட்ட கேப்பாங்க. ஆனா, படிப்பு மட்டும் தான் எனக்கு துணையா இருக்குமுன்னு ராப்பகலா உழைச்சு, படிக்க வெச்சாங்க.சில நேரங்களில் பீஸ் கட்டக் கூட வீட்டுல பணமிருக்காது. அந்த நேரத்துல சேமிப்புன்னு ஏதாவது இருந்தா, உதவியா இருக்குமேன்னு யோசிச்சுருக்கேன். போலியோ நோய் தாக்கிய என்னை குணப்படுத்த எங்க வீட்ல பெரிய அளவில் சேமிப்பு கிடையாது; அதனால் தான் நடக்கும் திறனை இழந்துட்டேன். இதெல்லாம் எனக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தை மனசுக்குள்ளே விதைச்சுக்கிட்டே இருந்துச்சு.சென்னை பல்கலைக்கழகத்துல, எம்.ஏ., முதலாம் ஆண்டு படிக்கிறப்ப எனக்கு வேலை கிடைச்சது.

நான் வேலைக்கு போனதும், வீட்டில் திருமணம் செஞ்சு வெச்சுட்டாங்க. என் மனைவிக்கு ரெண்டு காதும் கேட்காது; ஆனா, எங்களுக்குள்ள அப்படி ஒரு புரிதல் இருக்கு.திருமணமான பின், குழந்தை விஷயத்தில் நிறையவே யோசிச்சோம். குழந்தைக்கும் ஏதாவது குறை வந்துருமோன்னு பயம் இருந்துச்சு. டாக்டருங்க கிட்ட பேசி, தெளிவு பெற்ற பிறகு தான், குழந்தை பெத்துக்குற முடிவுக்கு வந்தோம். எங்க பையனுக்கு இப்போ, 3 வயசு ஆகுது. அதனால, அவன் பிறக்கிறதுக்கு முன்னாடியே, அவனுக்காக சேமிக்கணுமுன்னு முடிவு பண்ணிட்டேன்.

வளர்ந்து, பெரியவனாகும் நேரத்தில், மொத்தமா செலவு செய்ய முடியாது. என் பையனோட, 23 வயசுல, 10 லட்சம் சேர்க்கணும்ங்கிறது என் இலக்கு.எனக்கு சம்பளம், 23 ஆயிரம் ரூபாய். குடும்பச் செலவுகள் போக, என்னால் அதிகபட்சமா, மாசம், 1,000 ரூபாய் தான் சேர்த்து வைக்க முடியும். அந்த தொகைக்குள்ள இருக்கிற சேமிப்பு திட்டங்கள் பற்றி, நிறைய பேர்கிட்ட யோசனை கேட்டேன்.தபால் நிலையத்துல ஆரம்பிச்சு, தங்கம் வாங்குறது வரை, பலரும் பல யோசனைகள் கொடுத்தாங்க. கடைசியா, புதுச்சேரியில இருக்கிற, நிதி ஆலோசகர் ராஜசேகரன் என்பவர் தான், 'மியூச்சுவல் பண்டு' பத்தி சொன்னாரு. ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. திடீர் செலவுகளை சமாளிக்க, 500 ரூபாய், குழந்தையின் எதிர்காலத்துக்கு, 500 ரூபாய்ன்னு முதலீடு செஞ்சுட்டு வர்றேன்!Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy - Erfelden Reidstadt,ஜெர்மனி
21-நவ-202001:46:14 IST Report Abuse
Ramamoorthy When my salary was 500 Rs in 1975, I saved Rs 125 every month in a chit. In 1978 I got 4500. with little addition of 1500, I bookd a Bajaj chetak scooter in Dollars. got the scooter in 1979 sold it for 16000 ,bought a plot and raised foundation.In 1981, joined a chit of Rs 10000, got 7500,added 2500 and bought a plot in Coimbatore. Today I quote 80 lakhs for it. In 1987, joined a chit for Rs 1 lakh, got 90000 Rs, bought a 3 ground commercial plot in Chennai. Now worth of a very big amount. Savings only made me a millionaire.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X