பொது செய்தி

இந்தியா

'பேஸ்புக்'கில் அதிகரிக்கும் வெறுப்பை தூண்டும் பதிவுகள்

Updated : நவ 21, 2020 | Added : நவ 20, 2020
Share
Advertisement
புதுடில்லி: சமீப காலத்தில், 'பேஸ்புக்'கில் பதிவிடப்படும் கருத்துக்களில், வெறுப்பை பரப்பும் வகையிலான பதிவுகள் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. சமூக வலைதளமான பேஸ்புக்கை, உலகம் முழுதும், 182 கோடி மக்கள் உபயோகிக்கின்றனர். இதில், அரசியல், மதம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து, வெறுப்பை பரப்பும் பதிவுகள், ஏராளமாக பதிவிடப்படுகின்றன. எனினும், இவற்றில் எந்த நடவடிக்கைகளும்
'பேஸ்புக்' அதிகரிக்கும்  வெறுப்பை துாண்டும் பதிவுகள்

புதுடில்லி: சமீப காலத்தில், 'பேஸ்புக்'கில் பதிவிடப்படும் கருத்துக்களில், வெறுப்பை பரப்பும் வகையிலான பதிவுகள் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளமான பேஸ்புக்கை, உலகம் முழுதும், 182 கோடி மக்கள் உபயோகிக்கின்றனர். இதில், அரசியல், மதம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து, வெறுப்பை பரப்பும் பதிவுகள், ஏராளமாக பதிவிடப்படுகின்றன. எனினும், இவற்றில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்ற புகார்கள், பேஸ்புக் நிர்வாகம் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஜூலை முதல், செப்., வரை யிலான மூன்றாம் காலாண்டிற்கான அறிக்கையை, பேஸ்புக் நிர்வாகம் நேற்று வெளியிட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பேஸ்புக்கில் வெறுப்பை துாண்டும் பதிவுகள், அதிக அளவில் பகிரப்பட்டன. பதிவிட்டோருக்கு எதிராக, நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அவர்களின் பதிவுகள் நீக்கப்பட்டன.அதன்படி, கடந்த காலாண்டில், 0.10 - 0.11 சதவீத அளவிற்கு, வெறுப்பை பரப்பும் பதிவுகள் பதிவிடப்பட்டன. செயற்கை நுண்ணறிவு உதவியுடன், வெறுக்கத்தக்க பதிவுகளை கண்டறிந்து, அவற்றை நீக்கி வருகிறோம்.

அதன்படி, அந்த காலாண்டில், 2.21 கோடி பதிவுகள் நீக்கப்பட்டன. இதேபோல், பேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராமில், 65 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பேஸ்புக் நிர்வாகம், ஒவ்வொரு காலாண்டிலும், அறிக்கை வெளியிடுவது வழக்கமான ஒன்று. எனினும், தற்போது வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டிற்கான அறிக்கையில், வெறுப்பு பதிவுகள் குறித்த தகவல்களையும் சேர்த்துள்ளது, இதுவே முதன்முறை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X