'ஒ ன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற கருத்தை வலியுறுத்தி, சூலுார் கருமத்தம்பட்டி வட்டாரத்தில் தெய்வீக தமிழக சங்கத்தினர் பிரசாரம் மேற்கொண்டனர்.'தெய்வீக தமிழக சங்கம்' சார்பில், ஊழல், தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்கள், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஓட்டு வங்கி அரசியலுக்கு எதிராக வீடு, வீடாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.போகும் இடமெல்லாம்... தமிழ் மொழியில் பேசுங்க... குடும்ப பாரம்பரியத்த சிதைக்கும் டிவி சீரியல்களை புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர். ஆமாங்க.. டிவில போடுற பாதி நாடகங்கள், அப்படித் தான் இருக்குதுன்னு, நிறைய பேர் சொல்றத கேட்க முடியுது. அடுத்து உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கு, வரவேற்பு இருந்தது. இதோடு மட்டுமில்லாம... குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தரும் புத்தகங்களும் கொடுத்துட்டு வர்றாங்க...! இவர்கள் நோக்கம் நிறைவேறட்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE