பொது செய்தி

தமிழ்நாடு

மணி... மணியாய்... தமிழுக்கு அணி... அணியாய்...!

Updated : நவ 21, 2020 | Added : நவ 20, 2020
Share
Advertisement
பூசல்கள்...அமுத பூமியில்விஷப் பூஞ்சைகள்.உலகைப் பிளந்துபார்க்கும்கிளர்ச்சி கோடரிகளைபறிப்போம்.உள்ளத் தீவிரவாதியின்உணர்ச்சிஆயுதங்களை பிடுங்கிமனப்போர்நிறுத்துவோம்.என, இப்படியாக 'அமைதி' குறித்த கவிதையை படிக்கும் போது, சஞ்சலமாக இருக்கும் மனதுக்குள்ளும் ஏதோ ஒரு அமைதி. 'பெய்த நுால்' என்ற கவிதை புத்தகத்தில் இடம் பிடித்த இந்த கவிதைகள், பாலக்காட்டில், தமிழ் வழியில்
மணி... மணியாய்...    தமிழுக்கு அணி... அணியாய்...!

பூசல்கள்...அமுத பூமியில்விஷப் பூஞ்சைகள்.உலகைப் பிளந்துபார்க்கும்கிளர்ச்சி கோடரிகளைபறிப்போம்.உள்ளத் தீவிரவாதியின்உணர்ச்சிஆயுதங்களை பிடுங்கிமனப்போர்நிறுத்துவோம்.என, இப்படியாக 'அமைதி' குறித்த கவிதையை படிக்கும் போது, சஞ்சலமாக இருக்கும் மனதுக்குள்ளும் ஏதோ ஒரு அமைதி. 'பெய்த நுால்' என்ற கவிதை புத்தகத்தில் இடம் பிடித்த இந்த கவிதைகள், பாலக்காட்டில், தமிழ் வழியில் படித்த, எட்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்திலும் இடம் பிடித்தது என்பது தான் சிறப்பம்சம். இந்த கவிதை நுாலை எழுதியவர், மணிவண்ணன். கோவை வீரபாண்டியில் வசிக்கும் இவர், உதகை அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் துறை உதவி பேராசிரியராக உள்ளார்.தன்னை வளர்க்கும் தமிழுக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என்பது இவரின் நோக்கமாக இருப்பதால், கவிதை, மொழி பெயர்ப்பு, ஆய்வு என, இதுவரை, 12 நுால்களை பிரசவித்திருக்கிறார். இது, வாசகர்களிடையே பிரபலமானது.இதோடு நின்று விடாமல், துாய்மையை வலியுறுத்தும், 'புனிதா' என்ற தலைப்பிலான குழந்தைகள் கதை, 'மருதகுடியும் மகாலட்சுமி என்கிற எருமையும்' என்ற தலைப்பில், விவசாயிகளின் வாழ்க்கை, பந்துமுனை பேனாவால், இயற்கை அழிகிறது என்பதை விளக்கும், 'முனை', அனாதைகள் என்பவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் அல்ல... பிறந்த தேசத்தை இழந்தவர்கள் என்ற வாசகத்தை பின்னணியில் ஒலிக்க விட்ட 'நாடற்றவர்கள்' என, தொடர்கிறது குறும்படம். இதில், 'புனிதா' குறும்படம், மும்பையில் நடந்த திரை விழாவில் இடம் பிடித்தது, இந்த குழுவினரை சிறப்பு சேர்த்தது என்றே சொல்லலாம்.கலைப் படைப்புகளின் வரிசையில், பாரதியார் குறித்த முழுமையான ஆவணப்படம் ஒன்றை, இவரே நடித்து, இயக்கி உருவாக்கி உள்ளார் என்பது மேலும் சிறப்புக்குரியது.
இதுகுறித்து, மணிவண்ணன் கூறியதாவது:மாணவர்கள் சமூகத்துக்குள், 26 வருடமாக பயணிக்கிறேன். ஒரு குரு தனக்கு தெரிந்த அத்தனை கலைகளையும், முழுமையாக, தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பவனாக இருக்க வேண்டும். அப்படி ஒரு குருவாக இருக்க ஆசைப்படுகிறேன். கலைக்காக மட்டும் சுவைத்து கொண்டாடாமல், கலையை வாழ்க்கைக்கான பயன்பாட்டு தன்மையுடையதாக பரிணாமப்படுத்தும் போது தான், ஒரு படைப்பு முழுமையாகிறது. தற்போது, 'வெண்தரிசு நிலம்' என்கிற நாவல், தமிழிலும், மலையாளத்திலும் வெளிவரப் போகிறது. இது, இரண்டு படைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட ஒற்றை புதினம் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, அவர் கூறினார்.இவரின் 'பெய்த நுால்' முழுவதுமாக, ஸ்டான்லி என்ற எழுத்தாளரால், மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டது, இவருக்கு சூட்டிய மற்றொரு மகுடம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X