பொது செய்தி

இந்தியா

பாதிப்பு 90 லட்சத்தை கடந்தது: 44 லட்சம் பேருக்கு சிகிச்சை

Added : நவ 20, 2020
Share
Advertisement
புதுடில்லி:கடந்த, 24 மணி நேரத்தில், 45 ஆயிரத்து, 882 பேரிடம், கொரோனா பாதிப்பு உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 90 லட்சத்தை கடந்துள்ளது; இவர்களில், 4.44 லட்சம் பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பை கண்டறிய, நாடு முழுதும், 12.96 கோடி பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடந்த, 24 மணி

புதுடில்லி:கடந்த, 24 மணி நேரத்தில், 45 ஆயிரத்து, 882 பேரிடம், கொரோனா பாதிப்பு உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 90 லட்சத்தை கடந்துள்ளது; இவர்களில், 4.44 லட்சம் பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பை கண்டறிய, நாடு முழுதும், 12.96 கோடி பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடந்த, 24 மணி நேரத்தில், 10.83 லட்சம் பேரிடம் நடந்த சோதனை களின் முடிவில், 45 ஆயிரத்து, 882 பேரிடம், பாதிப்பு உறுதியானது.

இதனால், வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 90 லட்சத்து, 4,365 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 4.44 லட்சம் பேர், சிகிச்சை பெறுகின்றனர். இது மொத்த பாதிப்பில், 4.92 சதவீதம். மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால், கொரோனாவில் இருந்து, 84.28 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 93.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த, 24 மணி நேரத்தில் கொரோனாவால், 584 பேர் பலியாகி உள்ளனர். மஹாராஷ்டிராவில், 154; டில்லியில், 98; மேற்கு வங்கத்தில், 53; உத்தர பிரதேசத்தில், 39; கேரளா, சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகாவில் தலா, 26; தமிழகத்தில், 19 இறப்புகள் பதிவாகி உள்ளன.இவர்களுடன், ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 162 ஆக அதிகரித்து உள்ளது; இறப்பு விகிதம், 1.46 சதவீதம்.கொரோனா பலி எண்ணிக்கையில், 46 ஆயிரத்து, 356 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் தொடர்கிறது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மாநிலங்களுக்கு மத்திய குழுராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, நேற்று முன்தினம் மத்திய அரசின் சார்பில், உயர்மட்ட குழுவினர் அனுப்பி வைக்கப் பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய குழுவை அனுப்புவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X