பொது செய்தி

தமிழ்நாடு

நீங்கள் தான் ஹீரோ ப்ரோ...!

Updated : நவ 21, 2020 | Added : நவ 20, 2020
Share
Advertisement
மரண பயத்த காட்டிட்டாங்க பரமா... இந்த 'டயலாக்' கொரோனா வந்ததுக்கு அப்புறம், பலரின் நாவில் உச்சரித்திருக்கும். ெதனா படத்துல வர்ற மாதிரி, எதைக் கண்டாலும் பயம். அந்த பயம் இப்போ கொஞ்சம் குறைந்து போயிருக்கும். ஆனா என்ன... இந்த கொரோனா காலகட்டத்துல, நாம பல விஷயங்களை மறந்து போனோம். அதை மீண்டும் கொண்டு வரணும்.*கொரோனா காலத்துல இழந்த வருமானத்த, எப்படியாவது, இன்னும் கொஞ்ச நாள்ல
நீங்கள் தான் ஹீரோ ப்ரோ...!

மரண பயத்த காட்டிட்டாங்க பரமா... இந்த 'டயலாக்' கொரோனா வந்ததுக்கு அப்புறம், பலரின் நாவில் உச்சரித்திருக்கும். ெதனா படத்துல வர்ற மாதிரி, எதைக் கண்டாலும் பயம். அந்த பயம் இப்போ கொஞ்சம் குறைந்து போயிருக்கும். ஆனா என்ன... இந்த கொரோனா காலகட்டத்துல, நாம பல விஷயங்களை மறந்து போனோம். அதை மீண்டும் கொண்டு வரணும்.
*கொரோனா காலத்துல இழந்த வருமானத்த, எப்படியாவது, இன்னும் கொஞ்ச நாள்ல மீட்டெடுக்கணும் என்பதெல்லாம் சரி தான். அதுக்காக, எப்போதும் சிந்திச்சு கிட்டே இருக்காம, மனைவிக்கு தோள் சாய இடம் கொடுங்கள். குழந்தைகள் விளையாட கை கொடுங்கள்.
*அடுத்த கட்டமா என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது, அன்னாந்து விட்டத்த பார்த்துகிட்டே இருக்காம... மனைவி கிட்ட கேளுங்க... இல்ல உங்க ஐடியாவ, அவங்ககிட்ட சொல்லுங்க. கண்டிப்பா ஒரு வழி பிறக்கும். அது, ரஜினி பாணி... தனி வழியா கூட இருக்கலாம்.
*ராத்திரி வந்து தான், காமெடி சானல பாக்கணும்னு அவசியம் இல்ல. தேக்கி வச்சிருக்கிற நகைச்சுவை உணர்வை, டிவி பாத்து தான் கொட்டணுமா. யாராவது ஜோக் அடிச்சாங்கன்னா, வாய் விட்டு சிரிங்க. எனக்கு டைம் இல்ல... ஓய்வு கிடைக்கும் போது சிரிச்சுக்குறேன்னு சொல்லாதீங்க. வாய் விட்டு சிரிச்சா... நோய் விட்டு போகும் ப்ரோ...!
*இந்த வருஷம் எங்கேயும் போக முடியல. பாதிப்பு கொஞ்சம், கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது. இந்த சமயத்துல, ஊட்டி, கொடைக்கானல்னு போக முடியாவிட்டாலும், சொந்தக்காரங்க வீட்டுக்காவது போய்ட்டு வந்தா, மனசுக்கு கொஞ்சம் நிம்மதி.
*பக்கத்து வீட்டுகாரங்ககிட்ட ஒரு சின்ன புன்முறுவல். வாட்ச்மேன் அண்ணாவுக்கு ஒரு சல்யூட். வீட்டு வாசலில், குப்பை வண்டியை நிறுத்தி, குப்பையை வாங்குவோருக்கு ஒரு சின்ன பரிசு, சண்டை போட்டவர்களிடம் ஒரு ஹாய்... என்று, உங்கள் நடவடிக்கையை ஒரு நாள் மாற்றிப் பாருங்களேன். அந்த நாள், உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X