பொது செய்தி

தமிழ்நாடு

படைப்புழுக்கள் கட்டுப்படுத்த கோடை உழவு முக்கியம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சூலுார்:வேளாண்துறை மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழச்சி, சூலுார் யூனியன் அலுவலகத்தில் நடந்தது.கோவை வேளாண் பல்கலை பூச்சியியல் துறை தலைவர் நடராஜன் சாத்தையா பேசியதாவது:மக்காச்சோள பயிர்களை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு செய்வது அவசியம். நிலத்தை உழும் போது, வேப்பம் புண்ணாக்கு கலந்து
 படைப்புழுக்கள் கட்டுப்படுத்த கோடை உழவு முக்கியம்

சூலுார்:வேளாண்துறை மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழச்சி, சூலுார் யூனியன் அலுவலகத்தில் நடந்தது.கோவை வேளாண் பல்கலை பூச்சியியல் துறை தலைவர் நடராஜன் சாத்தையா பேசியதாவது:மக்காச்சோள பயிர்களை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு செய்வது அவசியம். நிலத்தை உழும் போது, வேப்பம் புண்ணாக்கு கலந்து ஆழமாக உழவேண்டும். அதன் வாயிலா, மண்ணில் உள்ள பூச்சிகள், முட்டைகள் அழிந்துவிடும். விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்க வேண்டும். ஊடுபயிராக, துவரை, உளுந்து, பாசிப்பயிறு ஆகியவற்றை விதைக்கலாம். வரப்பில், தட்டைப் பயிறு, சூரிய காந்தி, எள் ஆகியவற்றை நான்கு வரிசை நடவு செய்யவேண்டும். களைகளை அப்புறப்படுத்தி, பயிர் இடைவெளியை சரியாக கடைபிடித்தால், புழுக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் பிரபாகர், குமாரவடிவேல், துணை இயக்குனர்கள் சைலஸ், சபி அகமது, பெருமாள்சாமி, உதவி இயக்குனர் விஜய கல்பனா உள்ளிட்டோர் பேசினர்.ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி வரவேற்றார். துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி அலுவலர்கள் ராமச்சந்திரன், நவீன்குமார், சந்தோஷ்குமார், அன்பழகன், தளப்பிரியா, தினேஷ்குமார், முனுசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X