பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வாக்காளர்கள் சேர்ப்பு :அன்னூரில் ஆலோசனை

Added : நவ 20, 2020
Share
Advertisement
அன்னுார்:புதிய வாக்காளர்கள் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம், அ.தி.மு.க., சார்பில், அன்னுாரில் நடந்தது.ஜெ., பேரவையின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் நாசர் பேசுகையில், ''தேர்தல் பணியை வேகப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக செல்ல வேண்டும். படிவங்களை நிரப்பி தர வேண்டும். இறப்பு இருந்தால் பெயரை நீக்கவும், முகவரி மாற்றம் தேவைப்பட்டால் செய்து தரவேண்டும்.

அன்னுார்:புதிய வாக்காளர்கள் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம், அ.தி.மு.க., சார்பில், அன்னுாரில் நடந்தது.ஜெ., பேரவையின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் நாசர் பேசுகையில், ''தேர்தல் பணியை வேகப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக செல்ல வேண்டும். படிவங்களை நிரப்பி தர வேண்டும். இறப்பு இருந்தால் பெயரை நீக்கவும், முகவரி மாற்றம் தேவைப்பட்டால் செய்து தரவேண்டும். கடந்தாண்டு, மருத்துவ படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்கள், நான்கு பேர்தான் சேர்ந்தனர். ஆனால், இந்தாண்டு அ.தி.மு.க., அரசின் முயற்சியால், 400 பேர் சேர்ந்துள்ளனர். இது அ.தி.மு.க., அரசின் இமாலய சாதனை,'' என்றார்.ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் சாய் செந்தில், சித்ரா முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் சவுக்கத் அலி, ஒன்றிய தலைவர் கோபால் உட்பட ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X