வாக்காளர்களை சந்திக்க கட்சியினருக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களை சந்திக்க கட்சியினருக்கு அறிவுரை

Added : நவ 20, 2020
Share
அன்னுார்:வீடு, வீடாக சென்று, வாக்காளர்களை சந்திக்க, தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தப்பட்டது.அன்னுார் ஒன்றிய தி.மு.க., சார்பில், வாக்காளர் பட்டியல் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அன்னுாரில் நடந்தது.முகவர்களுக்கு, வாக்காளர் பட்டியல்கள் வழங்கப்பட்டன. வாக்காளர் பட்டியலுடன், வீடு வீடாகச் சென்று, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உட்பட கோரிக்கைகள் உள்ளனவா என்று கேட்க

அன்னுார்:வீடு, வீடாக சென்று, வாக்காளர்களை சந்திக்க, தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தப்பட்டது.அன்னுார் ஒன்றிய தி.மு.க., சார்பில், வாக்காளர் பட்டியல் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அன்னுாரில் நடந்தது.முகவர்களுக்கு, வாக்காளர் பட்டியல்கள் வழங்கப்பட்டன. வாக்காளர் பட்டியலுடன், வீடு வீடாகச் சென்று, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உட்பட கோரிக்கைகள் உள்ளனவா என்று கேட்க வேண்டும்; அவர்களுக்கு உரிய படிவங்கள் கொடுத்து உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய துணை சேர்மன் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், நகர பொறுப்பாளர் ரகமத்துல்லா உட்பட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X