பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிப்பு... காத்திருப்பு...!சிறுமுகை - காவிலிபாளையம் திட்டம் வருமா?

Added : நவ 20, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும், சிறுமுகை காவிலிபாளையம் பாசனத் திட்டத்தை, தமிழக அரசு அறிவிக்கும் என, 15 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.அத்திக்கடவு - -அவிநாசி திட்டத்தில், மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள, காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்பகுதிகள் இடம்பெறவில்லை. விவசாயிகள் கோரிக்கை

மேட்டுப்பாளையம்:குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும், சிறுமுகை காவிலிபாளையம் பாசனத் திட்டத்தை, தமிழக அரசு அறிவிக்கும் என, 15 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.அத்திக்கடவு - -அவிநாசி திட்டத்தில், மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள, காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்பகுதிகள் இடம்பெறவில்லை. விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அத்திக்கடவு -அவிநாசி 2வது என்ற திட்டத்தை அறிவித்து, அதில் விடுபட்ட பகுதிகள் அனைத்தும் சேர்க்கப்படும் என, தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.பவானிசாகர் அணை அருகே இருந்தும், சுற்றுப்பகுதிகளில், உள்ள விவசாய நிலங்கள், வானம் பார்த்த பூமியாகவும், வறட்சி நிறைந்த பகுதிகளாகவும் உள்ளன. அதனால், பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும், 'சிறுமுகை -காவிலிபாளையம்' திட்டத்தை, அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என, விவசாயிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இத்திட்டம் குறித்து, தமிழக அரசு ஏதும் அறிவிக்கவில்லை. மேலும் விடுபட்ட பகுதிகளை, அத்திக்கடவு - அவிநாசி திட்டம், இரண்டில் சேர்க்கப்படும், என அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான ஆணை ஏதும் இதுவரை வழங்கவில்லை.இதுகுறித்து, சிறுமுகை அடுத்த முடுதுறையை சேர்ந்த, ஓய்வு பெற்ற தாசில்தார் பழனிச்சாமி கூறியதாவது:கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பநத்தம், இரும்பறை, முடுதுறை, சின்னகள்ளிபட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளும், பவானிசாகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையம்பள்ளி, மாதம்பாளையம், நொச்சிக்குட்டை, நல்லுார், விண்ணப்பள்ளி, காவிலிபாளையம், வரப்பாளையம், காராப்பாடி, அன்னுார் ஒன்றியத்தில் அக்கரைசெங்கபள்ளி உட்பட, 15 ஊராட்சிகள், வறட்சியான பகுதிகளாகும். இப்பகுதிகளில், 1,000 அடிக்கு போர்வெல் பதித்தாலும், தண்ணீர் கிடைப்பதில்லை.கோடைகாலத்தில், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. விவசாயம் செய்ய போதிய தண்ணீர் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள், திருப்பூர், மற்றும் கோவை ஆகிய பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.சிறுமுகை விஸ்கோஸ் ஆலையின் கழிவு நீர் குழாய், பெத்திகுட்டை வரை, பூமிக்கு அடியில் உள்ளது. அதனால், மூளையூர் அருகே, பவானி ஆற்றில் இருந்து, இக்குழாயில் தண்ணீர் பம்பிங் செய்தால், 15 ஊராட்சிகளில் உள்ள, 250க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப முடியும். இதனால், 50 ஆயிரம் ஏக்கர்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். விவசாயம் செழிப்பதோடு, பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் பிரச்னையும் ஏற்படாது. எனவே, இத்திட்டத்தை, விரைவில் அரசு அறிவிக்கும் என, விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு, பழனிசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X