கேரள பத்திரிகையாளர் மீது உ.பி., அரசு சரமாரி புகார்

Added : நவ 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'மக்களிடம் ஜாதி உணர்வை துாண்டி, மோதலை ஏற்படுத்தும் நோக்கில் தான், ஹத்ராசுக்கு, கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான் செல்ல முயன்றார்' என, உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள ஹத்ராசில், 19 வயது தலித் பெண், கடந்த செப்டம்பரில், ஒரு கும்பலால், பாலியல்

புதுடில்லி:'மக்களிடம் ஜாதி உணர்வை துாண்டி, மோதலை ஏற்படுத்தும் நோக்கில் தான், ஹத்ராசுக்கு, கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான் செல்ல முயன்றார்' என, உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள ஹத்ராசில், 19 வயது தலித் பெண், கடந்த செப்டம்பரில், ஒரு கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், உயிரிழந்தார்.உயிரிழந்த பெண்ணின் உடலை, போலீசார் இரவோடு இரவாக தகனம் செய்தது, சர்ச்சையை தீவிரமாக்கியது.

இந்த சம்பவம் பற்றி, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இதற்கிடையில், டில்லியில் இருந்து ஹத்ராஸ் செல்ல முயன்ற, கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உட்பட நான்கு பேரை, உ.பி., போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு, 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்புடன் தொடர்பிருப்பதால், இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கப்பானுக்கு, 'ஜாமின்' வழங்க கோரி, கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, உ.பி., அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருந்ததாவது:

பார்ப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின், அலுவலக செயலராக, சித்திக் கப்பான் உள்ளார். ஆனால், கேரளாவை சேர்ந்த பத்திரிகை ஒன்றில் பணியாற்றுவதாக கூறி, அடையாள அட்டை வைத்துள்ளார். அந்த பத்திரிகை, 2016லேயே நிறுத்தப்பட்டு விட்டது.ஹத்ராஸ் சம்பவத்துக்கும், கப்பானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அங்கு சென்று, மக்களிடம் ஜாதி உணர்வை துாண்டி, மோதலை ஏற்படுத்தி, மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்டுத்துவது தான், கப்பானின் நோக்கம். அதனால் தான், அவரை கைது செய்தோம்.

அவருக்கு, ஜாமின் வழங்கக் கூடாது.கப்பானை சிறையில் சந்திக்க, அவரது குடும்பத்தின ருக்கும், வழக்கறிஞருக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது இதன் பின் விசாரணையை, அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
21-நவ-202004:05:00 IST Report Abuse
Raman கோவிலுக்குள் சென்ற தாழ்ந்த ஜாதி சிறுவனை உயர்ஜாதியினர் தாக்கிய நிகழ்வுகள் இன்னமும் நடந்துகொண்டு தான் இருக்கு...இதற்கு பதில் சொல்லுவார்களா
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
21-நவ-202004:02:55 IST Report Abuse
Raman மக்களிடம் ஜாதி உணர்வை துாண்டி, மோதலை ஏற்படுத்தி, மக்களை பிளவுபடுத்துவது யார் என்று இந்திய மக்களுக்கு தெரியும்... இதிலே மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்டுத்துவது தானாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X