பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை 1,000 ரூபாய் 'சீரம்' தலைவர் தகவல்

Added : நவ 20, 2020
Share
Advertisement
புதுடில்லி:“ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கி உள்ள, கொரோனா தடுப்பூசி மருந்து, 1,000 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும்,” என, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லாதெரிவித்தார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள்,

புதுடில்லி:“ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கி உள்ள, கொரோனா தடுப்பூசி மருந்து, 1,000 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும்,” என, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லாதெரிவித்தார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதுவரை நடந்துள்ள பரிசோதனைகளின்படி, இந்த மருந்து, வயதானோருக்கு நல்ல பலன் தருவதாக தெரியவந்துள்ளது. நம் நாட்டில், இந்த தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் உரிமத்தை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த தடுப்பூசி குறித்து, சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா, ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது: தடுப்பூசி மருந்தின், இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. பரிசோதனை முடிவுகள், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மக்களுக்கு இரண்டு 'டோஸ்' தடுப்பு மருந்து, 1,000 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள், சுகாதார ஊழியர்களுக்கும், வயதானோருக்கும் தடுப் பூசி கிடைத்துவிடும். ஏப்ரலுக்குள், பொது மக்கள் அனைவருக்கும் கிடைத்துவிடும். அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பு மருந்து கிடைக்க, மூன்று ஆண்டுகள் வரை ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால், 2024க்குள், அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும்.

இந்த தடுப்பூசி மருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக, எந்த புகார்களும் இதுவரை எழவில்லை. இந்தியாவில் செய்யப் பட்ட பரிசோதனை களின் முடிவுகள், ஒன்றரை மாதங்களில் கிடைத்துவிடும். அதை வைத்து, தடுப்பூசி மருந்தின் செயல்திறனை, நாம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


அமைச்சருக்கு முதல் தடுப்பூசி!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, 'பாரத் பயோடெக்' நிறுவனம், 'கோவாக்சின்' என்ற, கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது. ஹரியானாவில், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நேற்று துவங்கின. இதற்கான முதல் தடுப்பூசி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்ஜிற்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X