பொது செய்தி

இந்தியா

ஒட்டுமொத்த கிராமமே தொற்றில் தவிப்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
சிம்லா:ஹிமாச்சல பிரதேசத்தில், ஒரு கிராமத்தில் உள்ள அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஒருவர் மட்டும் தப்பியுள்ளார்.ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள லஹால் மாவட்டம் தோராங் கிராமத்தில், 42 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இப்பகுதியில் தற்போது கடும் குளிர் நிலவுவதால், மற்றவர்கள் குலு

சிம்லா:ஹிமாச்சல பிரதேசத்தில், ஒரு கிராமத்தில் உள்ள அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஒருவர் மட்டும் தப்பியுள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள லஹால் மாவட்டம் தோராங் கிராமத்தில், 42 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இப்பகுதியில் தற்போது கடும் குளிர் நிலவுவதால், மற்றவர்கள் குலு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இதற்கிடையே கிராமத்தில், 42 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில், பூஷன் தாக்கூர், 52, என்பவர் தவிர, 41 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.

இவர் தவிர, இவரது குடும்பத்தில் ஐந்து பேரும் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சில நாட்களுக்கு முன், கிராமத்தில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில், சமூக இடைவெளியின்றி அனைவரும் பங்கேற்றுள்ளனர். வைரஸ் பரவலுக்கு இதுவே காரணம் என, தெரிகிறது. கொரோனாவில் இருந்து தப்பிய பூஷன் தாக்கூர் கூறும்போது, ''பரிசோதனை முடிவுகளுக்குப் பின், தனி அறையில் வசிக்கிறேன். எனக்கான உணவை நானே சமைக்கிறேன். ''கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக விலகல் உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்றியதால், வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X