பொது செய்தி

இந்தியா

ஸ்வப்னா சுரேஷ் புகார் அமலாக்கத்துறை மறுப்பு

Added : நவ 20, 2020
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி யாக கருதப்படும், ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச் சாட்டை, அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்து உள்ளது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம்

திருவனந்தபுரம்:கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி யாக கருதப்படும், ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச் சாட்டை, அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்து உள்ளது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வழக்கில், துாதரக முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

முதல்வரின் முதன்மைச் செயலராக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை, அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

திருவனந்தபுரம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் பேசியதாக, 'ஆடியோ' ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. அதில், இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறும்படி, அமலாக்கத் துறையினர் நெருக்கடி கொடுப்பதாக, ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

இந்த ஆடியோ எப்படி கசிந்தது என்பது தொடர்பாக, கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி, அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:தங்க கடத்தல் வழக்கு விசாரணையில், யாருக்கும் எந்த நெருக்கடியையும், அமலாக்கத்துறை கொடுக்கவில்லை. இது தொடர்பாக, ஸவப்னா சுரேஷ் கூறுவதாக வெளியாகியுள்ள ஆடியோ அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றி, தீவிரமாக விசாரிக்க வேண்டும் என, கேரள சிறைத்துறைக்கு, அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆடியோவில் பேசியது ஸ்வப்னா தான் என்பது நிரூபிக்கப்பட்டால், அது பல சட்ட சிக்கல்களையும், பாதுகாப்பு விதிமீறல்களையும் ஏற்படுத்தும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


5 இடங்களில் சோதனை

தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு, கேரளாவில் நேற்று ஐந்து இடங்களில் சோதனை நடத்தியது.இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ள முகமது அஸ்லாம், அப்துல் லத்தீப், நஸ்ருதீன் ஷா, ரம்ஜான், முகமது மன்சூர் ஆகியோரின் வீடுகளில், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சோதனையில், பல மின்னணு பொருட்களையும், ஆவணங்களையும் அதிகரிகள் கைப்பற்றினர். தங்க கடத்தல் விவகாரத்தில் இதுவரை, 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X