திருவனந்தபுரம்:கேரள உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில், இரு முஸ்லிம் பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டுள்ளனர்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநில உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் மூன்று கட்டங்களாக நடக்க உள்ளது. இதில், பா.ஜ., சார்பில் இரு முஸ்லிம் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
மலப்புரம் மாவட்டத்தின் வண்டூர், பொன்முந்தம் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு, சல்பத் மற்றும் ஆயிஷா ஹூசைன் ஆகியோர், பா.ஜ., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில், ஆயிஷாவின் கணவர் ஹுசைன் பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவின் மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து, சல்பத் கூறியதாவது:அரசுப் பணிக்கு செல்ல விரும்பிய எனக்கு, 15 வயதில் திருமணம் செய்து வைத்தனர். இதனால், என் கனவு கானல் நீரானது. என் தோழியர் பலரும், உயர்கல்வி வாய்ப்பை திருமணத்தால் இழந்தனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வாக, பெண்களின் திருமண வயதை, 21 என, உயர்த்துவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 'முத்தலாக்' தடை சட்டம் நிறைவேற்றியுள்ளார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும், அவரது கொள்கைகள் என்னை கவர்ந்து உள்ளன. இந்திய அரசியலில் செயல் திறன் மற்றும் உறுதியில், மோடிக்கு நிகர், எவரும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE