ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு

Added : நவ 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலை எதிர்த்து, ஆதாரங்களுடன் வழக்கு தொடுக்க உள்ளதாக, டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான ஓட்டுக்கள் மீண்டும் எண்ணப்பட்டன. அதில், ஜோ பைடன் வெற்றி உறுதி

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலை எதிர்த்து, ஆதாரங்களுடன் வழக்கு தொடுக்க உள்ளதாக, டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான ஓட்டுக்கள் மீண்டும் எண்ணப்பட்டன. அதில், ஜோ பைடன் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அவருக்கு, 16 'எலக்டோரல் காலேஜ்' ஓட்டுக்கள் கிடைத்தன. இதன் மூலம், ஆட்சி அமைக்க தேவையான, 270 எலக்டோரல் ஓட்டுக்களை தாண்டி, 306 ஓட்டுக்களை, ஜோ பிடன் பெற்றுள்ளார்.

டிரம்ப்பிற்கு, 232 எலக்டோரல் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.இந்நிலையில், டிரம்ப் தரப்பில், நியூயார்க் முன்னாள் மேயர் ரூடி கியுலியானி தலைமையிலான வழக்கறிஞர்கள் அணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிபர் தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து, ஆதாரமுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும், அட்லாண்டா, டெட்ராய்ட், பிலடெல்பியா உள்ளிட்ட பல நகரங்களில், ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடந்துள்ளது. தபால் ஓட்டுப் பதிவிலும் மோசடி நடந்துள்ளது. ஓட்டுப் பதிவை கணக்கிடும் இயந்திரங்களில், டொமினியன் என்ற நிறுவனத்தின் சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது, நாடு முழுவதும், டிரம்பிற்கு கிடைத்த ஓட்டுக்களில், குறிப்பிட்ட சதவீதத்தை, பைடனுக்கு மாற்றும் வகையில், 'டியூன்' செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடியை, வெனிசுலா அதிபர் தேர்தலின்போது, முன்னாள் அதிபர் ஹியுகோ சாவேஸ் உத்தரவில், டொமினியன் செய்து கொடுத்துள்ளது. இந்நிறுவனத்திற்கு, ஜனநாயக கட்சியை சேர்ந்த, முன்னாள் அதிபர் கிளிண்டனின் அறக்கட்டளை, சோரஸ் ஆகிவற்றுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது.

இந்த விபரம், ஒரு துவக்கம்தான், இன்னும் பல திடுக்கிடும் தகவல்களை அடுத்தடுத்து வெளியிடப் போகிறோம். அமெரிக்க மக்கள், டிரம்பிற்கு அளித்த வெற்றியை, பைடன் பறித்துச் செல்ல விடமாட்டோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.டிரம்ப் தரப்பு குற்றச்சாட்டை, டொமினியன் நிறுவனம் மறுத்துள்ளது.


இந்திய அமெரிக்கர்கள் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆசிய - பசிபிக் அமெரிக்கர்கள், டிரம்பிற்கு பெருவாரியான ஓட்டுக்களை அளித்துள்ளனர். அவர்கள் மூலம், 2016 தேர்தலில், ஹிலாரி கிளிண்டன் பெற்றதை விட, ஜோ பைடன், 21 சதவீதம் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளது ஆய்வில் தெரிவந்துள்ளது.
- காரா கால்டுவெல்,

துணை இயக்குனர், ஆசிய பசிபிக் அமெரிக்க அமைப்பு

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
21-நவ-202007:44:22 IST Report Abuse
C.Jeyabalan டிரம்ப் ஒரு பெரும் பித்தலாட்ட்டக்காரன், அவன் பேசுவது அனைத்தும் பொய் மட்டுமே பெரும் ஏமாற்று பேர்வழி அவன்மீது பல வழக்குகள் உயிர்த்தெழப் போகின்றனர். வெள்ளை மாளிகையில் வாழ்ந்த ஒருவன் சிறைச்சாலையில் சாகப்போவது இவன் ஒருவனே அவனது பொய் பிராட்டுகளை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். இவனைப்போல மானம் (ஒழுக்கம்) கெடடவன் எவனும் கிடையாது. ஜார்ஜியாவில் அவனது கட்சி ஆட்ட்ச்சியில் உள்ளது மிரட்டி பார்த்தான் அவன் தோற்றதாக அந்த மாநிலம் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்ட்து. அவன் இடி அமின் (உகண்டா சர்வாதிகாரி) போலத்தான் அவன் சொல் செயல் அனைத்தும் பொய் அவனை கோமாளி என்று பத்திரிகைகள் / டிவி விமர்சிக்கின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X