ஸ்காட்லாந்து எழுத்தாளருக்கு 'புக்கர்' பரிசு

Added : நவ 20, 2020
Share
Advertisement
லண்டன்:இந்தாண்டுக்கான ஆங்கில நாவலுக்கான, 'புக்கர்' பரிசுக்கு, ஸ்காட்லாந்து எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டுவர்ட்டின், 'ஷக்கி பெயின்' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில், புக்கர் பரிசுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த படைப்புகளுக்கு, புக்கர் பரிசாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. சிறந்த ஆங்கில நாவல்களுக்கு இந்தப் பரிசு, 1969ம்

லண்டன்:இந்தாண்டுக்கான ஆங்கில நாவலுக்கான, 'புக்கர்' பரிசுக்கு, ஸ்காட்லாந்து எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டுவர்ட்டின், 'ஷக்கி பெயின்' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில், புக்கர் பரிசுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த படைப்புகளுக்கு, புக்கர் பரிசாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. சிறந்த ஆங்கில நாவல்களுக்கு இந்தப் பரிசு, 1969ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிது. இந்த ஆண்டுக்கான பரிசுக்கு, 162க்கும் அதிகமான எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளை அனுப்பியிருந்தனர்.

இறுதிச் சுற்றுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் அவ்னி தோஷியின் 'பிரன்ட் சுகர்' என்ற நாவல் உட்பட, ஆறு புத்தகங்கள் தேர்வாயின. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய, 'ஷக்கி பெயின்' நாவல், புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

பிழைப்புக்காக ஓர் குடும்பம் எதிர்கொள்ளும் போராட்டம் பற்றியும், அந்த போராட்டங்களுக்கு இடையில், சோர்ந்துபோன பெற்றோரை நேசிக்கும் குழந்தைகள் பற்றியும், மிக உருக்கமாக, இந்த நாவலில் டக்ளஸ் எழுதியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X