மேனகா மீதான ஊழல் வழக்கில் சி.பி.ஐ.,க்கு, நோட்டீஸ்

Added : நவ 20, 2020
Share
Advertisement
புதுடில்லி:சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மேனகா தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா உட்பட, மூன்று பேருக்கு எதிராக, 2006ம் ஆண்டு, ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அறிக்கைஅவர்கள் மூவரும், 50 லட்சம் ரூபாய், ஊழல்

புதுடில்லி:சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மேனகா தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா உட்பட, மூன்று பேருக்கு எதிராக, 2006ம் ஆண்டு, ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அறிக்கைஅவர்கள் மூவரும், 50 லட்சம் ரூபாய், ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த, சி.பி.ஐ., மேனகா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால், வழக்கை முடித்துவைக்க, சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.


உத்தரவு

எனினும், கடந்த பிப்., யில், சிறப்பு நீதிமன்றம், அந்த அறிக்கையை நிராகரித்தது. இந்த வழக்கில், மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக, நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்தது. இந்த வழக்கை விரிவாக விசாரிக்கவும், சி.பி.ஐ.,க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதேபோல், 2008ல், விசாரணையை முடித்துவைக்க, முதல் முறையாக, சி.பி.ஐ., சமர்ப்பித்த அறிக்கையும், நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், சி.பி.ஐ., சமர்ப்பித்த அறிக்கையை நிராகரித்து, விரிவான விசாரணை நடத்த, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, டில்லி உயர் நீதிமன்றத்தில், மேனகா தரப்பில், முறையிடப்பட்டது.

இந்த மனு, நீதிபதி யோகேஷ் கன்னா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கக்கோரி, சி.பி.ஐ.,க்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X