'சந்தா கோச்சார் மீது கடுமையாக நடந்து கொள்ள மாட்டோம்'

Added : நவ 20, 2020
Share
Advertisement
புதுடில்லி:'முறைகேடாக கடன் வழங்கி, ஆதாயம் பெற்ற வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாட்டோம்' என, உச்ச நீதிமன்றத்திடம், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.கைது சந்தா கோச்சார், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மூலம், வீடியோகான் நிறுவனத்திற்கு, முறைகேடாக, 1,875 கோடி ரூபாய் கடன் வழங்கி, கணவர் தீபக் கோச்சாருக்கு ஆதாயம்

புதுடில்லி:'முறைகேடாக கடன் வழங்கி, ஆதாயம் பெற்ற வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாட்டோம்' என, உச்ச நீதிமன்றத்திடம், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


கைது



சந்தா கோச்சார், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மூலம், வீடியோகான் நிறுவனத்திற்கு, முறைகேடாக, 1,875 கோடி ரூபாய் கடன் வழங்கி, கணவர் தீபக் கோச்சாருக்கு ஆதாயம் பெற்றுத் தந்ததாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில், தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை, சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் துாத் ஆகியோர் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளது. விசாரணைஇந்த குற்றச்சாட்டுகளை கோச்சார் குடும்பம் மறுத்துள்ளது.

இந்நிலையில், தீபக் கோச்சாரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சந்தா கோச்சார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அத்துடன், அமலாக்கத் துறையினர் தன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என, உத்தரவிடக் கோரி, மற்றொரு மனுவையும் அளித்தார். இந்த மனு, நேற்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறை சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா ஆஜரானார். அவர், ''அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, சந்தா கோச்சார் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார்கள்,'' என்றார்.இதை ஏற்ற அமர்வு, சந்தா கோச்சாரின் இதர மனுக்கள் மீதான விசாரணையை தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X