தமிழகம் மீது பிரதமர் மோடியின் கவனம்!

Updated : நவ 22, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
மத்திய அரசின் நலத்திட்டங்கள், கீழ்மட்டத்தில் சரிவர அமலாகின்றனவா என்பதை கண்காணிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்ட தன்னார்வ அமைப்பின் கவனம், தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது.மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விழிப்புணர்வுஅவற்றில் முக்கியமாக, வறுமை நிலையில் உள்ளவர்களின்
அரசு திட்டங்கள் ,அமலாகின்றனவா? தமிழகத்தின் மீது திரும்பும் பிரதமரின் கவனம்!

மத்திய அரசின் நலத்திட்டங்கள், கீழ்மட்டத்தில் சரிவர அமலாகின்றனவா என்பதை கண்காணிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்ட தன்னார்வ அமைப்பின் கவனம், தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது.மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.


விழிப்புணர்வுஅவற்றில் முக்கியமாக, வறுமை நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கென, 137 திட்டங்கள் உள்ளன; இவை அனைத்துமே, பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டவை.

பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரடியாகவே, இந்த திட்டங்கள் நாடு முழுதும் சென்றடை கின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும், கீழ் மட்டத்தில் ஒழுங்காக அமலாகின்றனவா என்பதை கண்காணிக்கவும், இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்தவும், ஒரு அமைப்பு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்ட, 'பிரதமர் நலத்திட்ட பிரசார இயக்கம்' என்ற அந்த தன்னார்வ அமைப்பின் தேசிய தலைவராக, பிரதமரின் சகோதரர் பிரஹலாத் மோடி உள்ளார்.விவசாயிகளுக்கான நிதி உதவி, பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதி உதவி உள்ளிட்ட விஷயங்களை, இந்த தன்னார்வ அமைப்பு கையாளுகிறது. அரசியல் சாராத, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு, இதில் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.


நடவடிக்கைஇந்த அமைப்பின் தீவிர பிரசாரம், பஞ்சாப், உ.பி., ஹரியானா போன்ற மாநிலங்களில், பெரிய அளவில் பலனை தந்துள்ளது. இந்நிலையில் தான், இந்த அமைப்பின் தமிழக பிரிவையும் வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன. இந்த அமைப்புக்கான தமிழக பிரிவின் தலைவராக, வணிக வரித் துறையில் கூடுதல் ஆணையராக இருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான, டாக்டர் ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.வேளாண் வர்த்தகத் துறையைச் சேர்ந்த முரளிதரன் செயலராகவும், விளம்பரத் துறையைச் சேர்ந்த மோகன் குமார் ரெட்டி, ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, டாக்டர் ராஜாராமன் கூறியதாவது:இந்த பொறுப்பு, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பிரதமரின் நலத்திட்டங்களை, உண்மையான பயனாளிகளிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை உள்ளது.வரும், 2021ம் ஆண்டை இலக்காக வைத்து, தமிழகம் முழுதும், இரண்டு லட்சம் பயனாளிகளிடம், பிரதமரின் நலத்திட்டங்களை சேர்க்க வேண்டுமென திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-நவ-202018:51:59 IST Report Abuse
Malick Raja மோடிஜி ஒவ்வொன்றாக விட்டு பார்க்கிறார் .. ஒன்னும் பலிக்கவில்லை .. என்ன செய்வது ...
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
27-நவ-202011:13:30 IST Report Abuse
R MURALIDHARANகாத்திருங்கள் பலிக்கும். தென்னிந்தியா மாநிலங்களில் கர்நாடகாவிற்கு பிறகு தெலுங்கானா தமிழகம் என இலக்கு நிர்ணயித்துள்ளனர். கேரளாவில் ப ஜ வலுவாக இருந்தாலும் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது. காரணம் அங்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஐம்பது சதவீதம் இருக்கிறார்கள். இந்துக்கள் கட்சி வாரியாக பிரிந்து கிடக்கிறர்கள். ஆனால் தமிழகம் அப்படி அல்ல. இங்கே இப்போது ஹிந்துக்கள் பெருவாரிக உள்ளனர்....
Rate this:
Cancel
P Ramanathan - Chennai,இந்தியா
22-நவ-202018:18:22 IST Report Abuse
P Ramanathan அருமை பிரதமரே
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
21-நவ-202018:55:38 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X