பொது செய்தி

இந்தியா

தொழில் நிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதி?

Added : நவ 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை:பெரிய தொழில் நிறுவனங்கள், வங்கிகளை துவங்குவதற்கு அனுமதி வழங்க, ரிசர்வ் வங்கியின் செயற்குழு பரிந்துரைத்துள்ளது.உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும், தனியார் வங்கிகளின் கார்ப்பரேட் கட்டமைப்பையும் மதிப்பாய்வு செய்ய, ரிசர்வ் வங்கி, செயற்குழு ஒன்றை அமைத்தது. அந்த செயற்குழு தயாரித்துள்ள வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை, வெளியிடப்பட்டது. அதன்படி, 1949ம் ஆண்டின்

மும்பை:பெரிய தொழில் நிறுவனங்கள், வங்கிகளை துவங்குவதற்கு அனுமதி வழங்க, ரிசர்வ் வங்கியின் செயற்குழு பரிந்துரைத்துள்ளது.

உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும், தனியார் வங்கிகளின் கார்ப்பரேட் கட்டமைப்பையும் மதிப்பாய்வு செய்ய, ரிசர்வ் வங்கி, செயற்குழு ஒன்றை அமைத்தது. அந்த செயற்குழு தயாரித்துள்ள வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை, வெளியிடப்பட்டது.

அதன்படி, 1949ம் ஆண்டின் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் தேவையான சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்றும், அதன் வாயிலாக, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, புதிய வங்கிகளை துவங்கும் உரிமையை வழங்கவும், அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், தனியார் வங்கிகளில், பங்குதாரர்களின் முதலீட்டு அளவை, 15 சதவீதத்தில் இருந்து, 26 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த பரிந்துரைகள் குறித்து, கருத்து தெரிவிக்க, அடுத்த ஆண்டு, ஜனவரி, 15ம் தேதி வரை, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கேட்ப, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
21-நவ-202015:39:06 IST Report Abuse
natarajan s ஏற்கனவே பிர்லா UCO Bank, TATA Central bank of India போன்றவற்றை நிறுவியவர்கள். இப்போது திரு அம்பானி brothers JIO வங்கி ஆரம்பிக்கலாம்.அதனால்தான் கொள்கை மாற்றம் மற்றும் Banking Regulation act இல் மாற்றம் கொண்டு வர முயற்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X