பொது செய்தி

இந்தியா

பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Added : நவ 20, 2020
Share
Advertisement
புதுடில்லி:பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள், ஜம்மு -- காஷ்மீரில் நேற்று முன் தினம், 'என்கவுன்ட்டர்' செய்யப்பட்டதை தொடர்ந்து, இது தொடர்பாக, ராணுவ அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசனை நடத்தினார். அப்போது, மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கான சதித்திட்டத்தை நம் வீரர்கள் முறியடித்து இருப்பதாக, பிரதமர் தெரிவித்தார்.ஜம்மு -- ஸ்ரீநகர் இடையிலான தேசிய

புதுடில்லி:பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள், ஜம்மு -- காஷ்மீரில் நேற்று முன் தினம், 'என்கவுன்ட்டர்' செய்யப்பட்டதை தொடர்ந்து, இது தொடர்பாக, ராணுவ அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசனை நடத்தினார். அப்போது, மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கான சதித்திட்டத்தை நம் வீரர்கள் முறியடித்து இருப்பதாக, பிரதமர் தெரிவித்தார்.

ஜம்மு -- ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையின், நக்ரோட்டா என்ற இடத்தில், வாகனங்களை சோதனை செய்யும் பணியில், போலீசாரும், பாதுகாப்புப் படையினரும், நேற்று முன் தினம் ஈடுபட்டிருந்தனர்.அதிகாலை, 5:00 மணிக்கு, அந்த வழியாக வந்த லாரியை, பாதுகாப்புப் படையினர் வழிமறித்து நிறுத்தினர்.

பீதியடைந்த டிரைவர், லாரியில் இருந்து இறங்கி தப்பினார்.லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது, துப்பாக்கியால் சுட்டனர். கையெறி குண்டுகளை வீசி, பயங்கர தாக்குதல் நடத்தினர். இதற்கு, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்தச் சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும், ஜெய்ஷ் -- இ - -முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என, தெரிய வந்தது.அவர்கள் வைத்திருந்த, துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சண்டையில், இரண்டு போலீசார் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக, உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் ஆலோசனை நடத்தனார்.இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலர், உளவுத்துறை உயர் அதிகாரிகள் உட்பட, பலர் பங்கேற்றனர். ஆலோசனைக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன், ஜம்மு -- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற, பாக்.,கை சேர்ந்த, ஜெய்ஷ் -- இ -- முகமது பயங்கரவாதிகளை, சரியான நேரத்தில், நம் வீரர்கள், சுட்டு வீழ்த்தியுள்ளனர். அவர்களின் துடிப்பான செயலுக்கு பாராட்டுக்கள். இதன் வாயிலாக, ஜம்மு -- காஷ்மீரில் நடத்தப்பட இருந்த மிகப் பெரிய தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008 நவ., 26ல், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலின் நினைவு தினத்தன்று, ஜம்மு - காஷ்மீரில், மிகப்பெரிய தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தது, தெரிய வந்துள்ளது. காஷ்மீரில் மட்டுமல்லாமல், நாட்டின் பல முக்கிய நகரங்களிலும், பெரிய அளவில் தாக்குதலை நடத்த, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக, நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை அவர்கள் பதுக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. நம் பாதுகாப்பு படையினர், சமார்த்தியமாகச் செயல்பட்டு, இந்த சதி திட்டத்தை முறியடித்துள்ளனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.----------------------------------'ருபே' கார்டு துவக்கம்கடந்த ஆண்டு ஆகஸ்டில், பிரதமர் நரேந்திர மோடி, தெற்காசிய நாடான பூட்டானுக்கு சென்றார். அப்போது, அந்நாட்டு பிரதமர் லொடாய் ஷெரிங் உடன் இணைந்து, 'ருபே' அட்டையை வெளியிட்டார். இது, நம் நாட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள், 'ருபே' அட்டைகளை, பூட்டானில் உள்ள, ஏ.டி.எம்.,கள் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்த வழி செய்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட, 'ருபே' அட்டை துவக்க விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. பிரதமர் மோடி மற்றும் பூட்டான் பிரதமர் இணைந்து, அட்டையை வெளியிட்டனர்.'இதன் வாயிலாக, பூட்டானைச் சேர்ந்தவர்கள், தங்கள் 'ருபே' அட்டைகளை, நம் நாட்டில் இனி பயன்படுத்த இயலும்' என, தெரிவிக்கப்பட்டது.குடிநீர் குழாய் திட்டம் துவக்கம்மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, நாளை பங்கேற்கிறார்.மொத்தம், 5,555 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் வாயிலாக, 2,995 கிராமங்களைச் சேர்ந்த, 42 லட்சம் மக்கள், பயன்பெற உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X