அரசியல் செய்தி

தமிழ்நாடு

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' கனிமொழி, உதயநிதி தேர்தல் பிரசாரம்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் மகளிர் அணி செயலர் கனிமொழி, இளைஞரணி செயலர் உதயநிதி உட்பட, 15 பேர், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற கோஷத்துடன், 75 நாள் தொடர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.500 உள்ளூர் நிகழ்ச்சிகள்தி.மு.க., முதன்மை செயலர் கே.என்.நேரு அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலுக்காக, 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற, பிரசாரம் செய்ய

சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் மகளிர் அணி செயலர் கனிமொழி, இளைஞரணி செயலர் உதயநிதி உட்பட, 15 பேர், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற கோஷத்துடன், 75 நாள் தொடர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.


500 உள்ளூர் நிகழ்ச்சிகள்

தி.மு.க., முதன்மை செயலர் கே.என்.நேரு அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலுக்காக, 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற, பிரசாரம் செய்ய உள்ளோம்.ஸ்டாலின் துாதுவர்கள், 15 பேர், 234 தொகுதிகளில் பிரசாரத்திற்கு செல்ல உள்ளனர்.அவர்கள் தொடர்ந்து, 75 நாட்கள் பயணித்து, 15 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு சென்று, 1,500 கூட்டங்களிலும், 500 உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, 10 லட்சம் மக்களை சந்திக்க உள்ளனர்.

அ.தி.மு.க., அரசின், 10 ஆண்டு கால நிர்வாக சீர்கேட்டையும், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்தும், மக்களிடம் பிரசாரம் செய்ய உள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில், உதயநிதி நேற்று பிரசாரம் துவக்கி உள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து, வரும், 29ம் தேதி, கனிமொழி பிரசாரம் செய்ய உள்ளார்.தொகுதி பங்கீடுதொடர்ந்து, திருச்சி சிவா, லியோனி, சபாபதி மோகன், பொன்முடி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், ராஜகண்ணப்பன், தமிழச்சி தங்கபாண்டியன், செந்தில்குமார், ஏ.கே.எஸ்.விஜயன், எஸ்.ஆர்.பார்த்திபன், காத்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்ட, 15 பேர் பிரசாரம் செய்கின்றனர்.

'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கொரோனா தொற்று பரவல் குறைந்ததும், ஸ்டாலின் பிரசாரம் துவக்குவார்.தேர்தல் வரும் நேரத்தில், பிற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்; வராமலும் போகலாம். தொகுதி பங்கீடு குறித்து, ஸ்டாலின் அறிவிப்பார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, நல்ல நிலையில் உள்ளது. எந்த கலகத்தையும், எங்களிடம் ஏற்படுத்தி விட முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.


கோவையா; காஞ்சியா?



கொரோனா தொற்று பரவல் குறைந்த பின், ஜன., 5ல் அல்லது பொங்கலுக்கு பின், தன் தேர்தல் பிரசாரத்தை துவக்க, ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.அ.தி.மு.க., கோட்டையாக கருதப்படுகிற கொங்கு மண்டலத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது. தன் பிரசாரத்தை கோவையில் துவக்கலாமா அல்லது காஞ்சிபுரத்தில் துவக்கலாமா என, ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

சீமான் போட்டி

சென்னை, கொளத்துார் தொகுதியில், ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட முடிவு செய்துள்ளார்.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X