பொது செய்தி

தமிழ்நாடு

பல நுாறு கோடி மோசடி தயாரிப்பாளர் புகார்

Added : நவ 20, 2020
Share
Advertisement
சென்னை:''தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாக வர வேண்டிய, பல நுாறு கோடி ரூபாய் கவனிக்காமல் விடப்பட்டுள்ளது. இதற்கு, நிர்வாகிகளே காரணம்,'' என, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் கூறியுள்ளார்.தயாரிப்பாளர் சங்க தேர்தலில், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும், அவர் அளித்த பேட்டி: தயாரிப்பாளர் சங்கத்தில், 1995ம் ஆண்டில், கே.ஆர்.ஜி., தலைவராக இருந்த போது, தனியார், 'டிவி' ஒன்றுடன் பாடல்கள்

சென்னை:''தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாக வர வேண்டிய, பல நுாறு கோடி ரூபாய் கவனிக்காமல் விடப்பட்டுள்ளது. இதற்கு, நிர்வாகிகளே காரணம்,'' என, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும், அவர் அளித்த பேட்டி: தயாரிப்பாளர் சங்கத்தில், 1995ம் ஆண்டில், கே.ஆர்.ஜி., தலைவராக இருந்த போது, தனியார், 'டிவி' ஒன்றுடன் பாடல்கள் ஒளிபரப்ப, ஒரு லட்சம் ரூபாய்; அடுத்தடுத்து ஒளிபரப்ப, குறைந்த பட்சம், ௨,௦௦௦ ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து, ஒப்பந்தம் போடப்பட்டது.இந்த ஒப்பந்தம் போட்டு, 25 ஆண்டுகள் ஆகியும், அதன் விவரம் யாருக்கும் தெரியவில்லை.

அதன் அடிப்படையில் பார்த்தால், சங்கத்திற்கு வந்து சேரவேண்டிய தொகை, பல நுாறு கோடி ரூபாய் இருக்கும்.நமக்கு வர வேண்டிய தொகையை சரிவர பார்க்காமல், அடுத்து வந்தவர்களும், சுயலாபத்திற்கும், அவரவர் வியாபாரத்திற்கு மட்டுமே பதவியை பயன்படுத்தினர். சங்கத்தில், 1,300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் உள்ளனர். இதில், 90 சதவீத தயாரிப்பாளர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

அந்த ஒப்பந்த நகலை நான் மீட்டுள்ளேன். முறையாக நமக்கு வர வேண்டிய பணம் வரவில்லை. இப்பணம் முறையாக வந்திருந்தால், நாமே மற்றவர்களுக்கு நிதியுதவி தரலாம்.குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சியை குற்றம் சாட்டுவதை காட்டிலும், அடுத்தடுத்து வந்த நிர்வாகிகளை தான் குற்றம் சொல்ல வேண்டும். நமக்கு வர வேண்டிய பணத்தை மீட்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X