அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அனைவருக்கும் வீடு 2022ல் நிறைவேறும்'

Added : நவ 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:''பிரதமரின் அனைவருக்கும் வீடு என்ற எண்ணம், தமிழகத்தில், 2022ம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும்,'' என, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. கூட்டத்தில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி
 'அனைவருக்கும் வீடு 2022ல் நிறைவேறும்'

சென்னை:''பிரதமரின் அனைவருக்கும் வீடு என்ற எண்ணம், தமிழகத்தில், 2022ம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும்,'' என, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. கூட்டத்தில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில், ஒரு வீட்டிற்கான தொகை, தேசிய அளவில், 1.20 லட்சம் ரூபாயாக இருந்தாலும், தமிழக அரசு கான்கிரீட் மேற்கூரை அமைக்க, மாநில நிதியில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயை கூடுதலாக வழங்குகிறது.கடந்த, 2016 முதல், 2020 வரை ஒதுக்கப்பட்ட, 5.27 லட்சம் வீடுகளில், இதுவரை, 4.01 லட்சம் பயனாளிகளுக்கு, அனுமதி ஆணை வழங்கப்பட்டு, 2.65 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 1.36 லட்சம் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது; 1.26 லட்சம் பயனாளிகளுக்கு, பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் மொத்தம், 8,968.39 கோடி ரூபாய் மதிப்பில், வீடு கட்டும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.தமிழகத்தில், 2011 முதல், 2020 வரை, உள்ளாட்சித் துறை சார்பில், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், 17.08 லட்சம் பயனாளிகளுக்கு, பல்வேறு திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.ஊரகப் பகுதிகளில் மட்டும், பணி ஆணை வழங்கப்பட்ட, 18.30 லட்சம் வீடுகளில், 15.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தகுதியுள்ள விடுபட்ட பயனாளிகளை, சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது.அதன்படி, 9.11 லட்சம் தகுதியுள்ள பயனாளிகள் பெயர், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இரண்டாம் கட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட இலக்கை அடைய, பயனாளிகளை தேர்வு செய்ய, மத்திய அரசு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடக்காத, ஒன்பது மாவட்டங்களுக்கான, 14வது மத்திய நிதிக் குழுவின், தமிழகத்திற்கான அடிப்படை மானியம், 548.76 கோடி ரூபாய்; செயலாக்க மானியம், 705.62 கோடி ரூபாய் என, மொத்தம், 1,254.38 கோடி ரூபாயை, உடனடியாக விடுவிக்க வேண்டும்.பிரதமரின் அனைவருக்கும் வீடு என்கின்ற எண்ணம், தமிழகத்தில் முழுமையாக, வரும், 2022ம் ஆண்டுக்குள், முதல்வர் தலைமையில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
21-நவ-202018:44:00 IST Report Abuse
R.RAMACHANDRAN அரசு வழங்கும் தொகையில் இரண்டு சதுர வீடு கட்டினால் கடனாளியாகிவிடுவார் என்பதால் ஏழைகள் யாரும் முன்வருவது இல்லை. இலக்கினை அடைய வசதிப்படைத்தவர்களுக்கு விற்றுவிடுகின்றனர். அவர்கள் இந்த தொகையுடன் அவர்கள் பணத்தை செலவு செய்து வீட்டினை பெரிதாக கட்டிக் கொள்கின்றனர். இதையெல்லாம் சாதனையாக பெரிதுபடுத்தி ஒட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்கின்றனர் இந்த நாட்டில்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-நவ-202013:04:57 IST Report Abuse
Lion Drsekar இறைவா நீ இருப்பது உண்மையா ? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X