சென்னை:முதுநிலை சித்தா மற்றும் ஓமியோபதி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி, ஆத்துாரில் உள்ள, ஒயிட் மெமோரியல்ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை ஓமியோபதி மருத்துவ படிப்பில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், சென்னை, பாளையங்கோட்டை அரசு சித்தா மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை சித்தா படிப்புக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை, www.tnhealth.gov.in என்ற இணையதளத்தில், நாளை மறுதினத்தில் இருந்து, 27 வரை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும், 30ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் தொகுப்பேடு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE