சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவில் நெல் கொள்முதல் விவசாயிகள் புகார்

Added : நவ 21, 2020
Share
Advertisement
வாலாஜாபாத் : கோவிந்தவாடி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், இரவில் எடை போடுவதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி காய்கறி சந்தை கட்டடம் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.இங்கு, ஊவேரி, புதுப்பாக்கம், கோவிந்தவாடி, கம்மவார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல்

வாலாஜாபாத் : கோவிந்தவாடி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், இரவில் எடை போடுவதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி காய்கறி சந்தை கட்டடம் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.இங்கு, ஊவேரி, புதுப்பாக்கம், கோவிந்தவாடி, கம்மவார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, நெல் கொள்முதல் செய்யலாம் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இருப்பினும், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், விவசாயிகளின் நெல்லை மாலை, 6:00 மணிக்கு துவங்கி, இரவோடு இரவாக எடை போட்டு முடித்து விடுவதாக, விவசாயிகள் இடையே புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, கோவிந்தவாடி அகரம்கேட் பகுதியைச் சேர்ந்த வி.எம்.ஆறுமுகம் கூறியதாவது: அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்கு எடுத்து சென்றால், எனக்கு பின் எடுத்து வருவோரின் நெல்லை, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்கின்றனர்.ஈரப்பதம் இன்றி இருக்கும் என் நெல்லை, எடை போடுவதற்கு அதிகாரிகள் காலம் தாழ்த்துகின்றனர். நெல் மூட்டைக்கு பணம் கொடுக்கும் நபர்களுக்கு, இரவில் நெல் எடை போடுகின்றனர்.

முறையாக, 'டோக்கன்' போட்டு வைத்தவர்களின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதை உயர் அதிகாரிகள் தான் முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X