பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி நகராட்சியில் தொடரும் பரிசோதனை

Added : நவ 21, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, பொதுமக்களிடம், பரிசோதனை தொடர்ந்து நடக்கிறது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு முழுமையாக கடைப்பிடித்தபோது, சுகாதாரப் பணியாளர்கள், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வீடுதோறும் சென்று, மக்களிடம் பரிசோதனை செய்தனர்.தற்போது, வைரஸ் பரவல் ஓரளவுக்கு

காஞ்சிபுரம் : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, பொதுமக்களிடம், பரிசோதனை தொடர்ந்து நடக்கிறது.

காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு முழுமையாக கடைப்பிடித்தபோது, சுகாதாரப் பணியாளர்கள், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வீடுதோறும் சென்று, மக்களிடம் பரிசோதனை செய்தனர்.தற்போது, வைரஸ் பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளது. இதனால், மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். இருந்தாலும், தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

நகராட்சி சுகாதார பணியாளர்கள், முக்கிய கோவில்களில் முகாமிட்டு, தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களிடம், வைரஸ் பரிசோதனை செய்து வருகின்றனர். நேற்று, வரதராஜ பெருமாள், கச்சபேஸ்வரர், உலகளந்த பெருமாள் ஆகிய கோவில்களுக்கு வந்த பக்தர்களிடம், சுகாதார பணியாளர்கள், வைரஸ் பரிசோதனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X